சூரியமூர்த்தி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013) | Kalvimalar - News

சூரியமூர்த்தி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)

எழுத்தின் அளவு :

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 496 மார்க் பெற்று, மாநிலத்தில் மூன்றாமிடத்தையும், தஞ்சை மாவட்டத்தில் முதலிடத்தையும் தஞ்சை அம்மாபேட்டை தூய மெர்சினா மெட்ரிக் பள்ளி மாணவர் சூரியமூர்த்தி பெற்றுள்ளார்.

இவரது தந்தை கேசவன், தாய் ரேணுகா, தம்பி வெங்டேஷ்வரன். இவர்கள் அம்மாபேட்டையிலுள்ள வெள்ளாஞ்செட்டி தெருவில் வசிக்கின்றனர். தந்தை கேசவன் விவசாய தொழிலாளி ஆவார்.

மாணவர் சூரியமூர்த்தி பாடவாரியாக, தமிழ் 99, ஆங்கிலம் 88, கணக்கு 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 100 என, மொத்த மார்க் 496 பெற்றுள்ளார்.

மாநில சாதனை குறித்து மாணவர் சூரியமூர்த்தி கூறுகையில், "நான் டியூசன் சென்று படிக்கவில்லை. ஆனாலும், ஆசிரியர்கள் புரியும்படி பாடம் சொல்லி கொடுத்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஜனட் ரவீந்திரன், அதிக மார்க் பெற வேண்டும் என, உற்சாகம் ஊட்டினார். அதனால், சாதனை பெற முடிந்தது. எதிர்காலத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக ஆசை," என்றார்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us