நேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன் எனப்படும் தேசிய திறனறியும் தேர்வை 8ம் வகுப்பில் படிக்கும் எனது மகள் எழுத விரும்புகிறாள். இது பற்றிக் கூறவும். | Kalvimalar - News

நேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன் எனப்படும் தேசிய திறனறியும் தேர்வை 8ம் வகுப்பில் படிக்கும் எனது மகள் எழுத விரும்புகிறாள். இது பற்றிக் கூறவும். ஜூன் 30,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் தற்போது 8ம் வகுப்பில் படிக்கும் எந்த மாணவரும் இதை எழுதலாம். இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உதவித் தொகைக்காக தேர்வு செய்யப்படுபவருக்கு மத்திய அரசு உதவித் தொகை தரப்படுகிறது.

இது 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்வானது மாநில அளவில் நடத்தப்படுவது. இதில் 2 பகுதிகள் இடம் பெறுகின்றன. மென்டல் எபிலிடி டெஸ்ட், ஸ்காலஸ்டிக் எபிலிடி டெஸ்ட் ஆகிய 2 பகுதிகள் இவை. இவற்றில் சோஷியல் சயின்ஸ், சயின்ஸ் மற்றும் கணிதம் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இடம் பெறும். இதில் தகுதி பெறுபவருக்கு 2ம் கட்டத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது. இதிலும் மேலே குறிப்பிட்டுள்ள 2 பகுதிகளிலிருந்து கேள்விகள் இடம் பெறும். இதில் தகுதி பெறுபவருக்கு இறுதியாக நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.

இந்தத் தேர்வு பற்றிய முழு விபரங்களையும் படிவத்தையும் www.ncert.nic.in  தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்தத் தேர்வுக்கு மாநில அளவிலான அலுவலகத்திற்குத் தான் விண்ணப்பிக்க வேண்டும். எனவே இந்தத் தகவல்களை நன்றாக வெப் தளத்தில் பார்த்துக் கொள்ளவும். இந்தத் தேர்வானது நவம்பர் 16 அன்று நடத்தப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகஸ்ட் 30.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us