அனிமேசன் துறை பற்றிக் கூறுங்கள்.
படங்களை நகரச் செய்வதே அனிமேசன் என்பதை அறிவீர்கள். மீடியாவின் மிக வேகமாக வளரும் பிரிவாக உருவாகும் துறை அனிமேசன் தான். 3டி அனிமேசன் கதைகள் இன்று குழந்தைகளிடம் மட்டுமல்லாது அனைவரிடமும் பிரசித்தி பெற்று வருகின்றன. இதில் பயிற்சி பெறுபவர், மாடலர், லே அவுட் ஆர்டிஸ்ட், கிளீன் அப் ஆர்டிஸ்ட், ஸ்கேனர் ஆபரேடர், டிஜிடல் இங்க் அண்ட் பெயிண்ட் ஆர்டிஸ்ட், கீ பிரேம் அனிமேட்டர், பேக்கிரவுண்ட் ஆர்டிஸ்ட் மற்றும் அனிமேட்டர் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
மிக அதிகமான கிரியேடிவிடி தேவைப்படும் துறை இது. ஒருவரின் கற்பனை சக்திக்கான சவாலாக இது விளங்குகிறது. படம் வரைவதில் அடிப்படைத் திறனும் ஆர்வமும் பெற்றிருப்பது அத்தியாசியத் தேவையாக இருக்கிறது. +2 முடித்திருந்தால் இதில் டிப்ளமோ/சான்றிதழ் படிப்புகளில் சேரலாம். கம்ப்யூட்டர் திறன் பெற்றிருப்பதும் மிக மிக அவசியமாகும்.
இன்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர், ஐ.ஐ.டி., இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் போன்றவை இதில் சிறப்புப் படிப்புகளைத் தருகின்றன.
இதில் சில குறிப்பிடத்தக்க நிறுவனங்கள்
இதில் பயிற்சி பெறும் ஒருவர் 3டி அல்லது 2டி மாடலர், ஸ்பெசல் எப்.எக்ஸ். கிரியேட்டர், அனிமேட்டர், கேரக்டர் டிசைனர், கேம்ஸ் டிசைனர், இன்டராக்சன் டிசைனர் போன்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம்.