பொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு | Kalvimalar - News

பொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு

எழுத்தின் அளவு :

பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகரித்ததன் விளைவாக முதுநிலை பொறியியலுக்கான மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவுகிறது. முதுநிலை பொறியியல் படிப்பதற்கும் வேலை வாய்ப்பிற்கும் முக்கியமானதாக கேட் தேர்வு உள்ளது.

கேட் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் எடுப்பதன் மூலம் சிறந்த கல்லூரிகளில் எம்.இ. / எம்.டெக். படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதோடு அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனம், பாபா அணு ஆராய்ச்சி நிலையம், என்.டி.பி.சி., பெல் நிறுவனம் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்கள் கேட் மதிப்பெண்களின் அடிப்படையில் பணிக்கு சேர்க்கின்றனர்.

வருடத்திற்கு வருடம் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008இல் 1 இலட்சத்து 66 ஆயிரம் பேர் எழுதிய நிலையில், 2011இல் 5 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒரு முறை எழுதி பெறப்படும் மதிப்பெண் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

தேர்விற்கு சிறப்பாக தயாராக சில ஆலோசனைகள்

* கடந்த ஆண்டின் கேள்வித்தாள்களை பெற்று அதில் உள்ள பாடங்களை படியுங்கள்.

* புத்தகங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அடிப்படை பாடங்களை முக்கியமாகக் கொண்ட புத்தகங்கள், கருத்துருக்களை அடிப்படையாக்கக்கொண்ட புத்தகங்கள் ஆகியவை ஆகும். தேர்வுகளுக்கென வெளிவரும் சிறந்த புத்தகங்களை வாங்கி தேர்வுக்கு தயாராகாலாம்.

* ஒரே புத்தகத்தை வாங்கி தயாராவதை விட ஒரே பாடத்தை மையமாகக்கொன்டுள்ள வேறு வேறு புத்தகங்களை வாங்கி படிக்கும்பொழுது கூடுதலான தகவல்கள் கிடைக்கும்.

* ஒரே தலைப்பின் கீழ் அதிகமான கேள்விகளுக்கு, உங்களை தயார்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் மனம் உறுதிப்படும்.

* எந்த பாடப் பகுதிகளில் எல்லாம் நீங்கள் சிறப்பாக தயாராகவில்லையோ அந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள். முக்கியமான "ஃபார்முலா"க்களை நினைவில் நிலை நிறுத்துவதற்கான எளிய வழிமுறைகளை கண்டுகொள்ளுங்கள்.

* கேட் பாடத்திட்டத்தில் இல்லாத பாடங்களை படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.

* தேர்விற்கு 20 நாட்களுக்கு முன்னதாக படிப்பதை நிறுத்திவிட்டு தொடர்ந்து கேள்விகளுக்கு விடையளித்து உங்களை சோதித்து பாருங்கள்.

* உங்களால் தனியாக தேர்வுக்கு தயாராக முடியாது என நினைத்தீர்கள் என்றால், கேட் தேர்விற்கான பயிற்சி மையத்தை அணுகுவது புத்திசாலித்தனமான முயற்சியாக இருக்கும் அல்லது கேட் தேர்விற்கு தயாராகும் மற்ற நண்பர்களோடு குழுவாக இணைந்து தயாராவதும் பயனளிக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us