மாலிக்குளர் மெடிசன் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

மாலிக்குளர் மெடிசன் ஸ்காலர்ஷிப்ஏப்ரல் 19,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

சைப்ரஸ் நாட்டில் அமைந்துள்ள மாலிக்குளர் மெடிசன் கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சைப்ரஸ் ஸ்கூல் ஆப் மாலிக்குளர் மெடிசன்
சைப்ரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் நியூராலஜி அண்ட் ஜெனிடிக்ஸ் கல்வி நிறுவனத்தின் அங்கமான சைப்ரஸ் ஸ்கூல் ஆப் மாலிக்குளர் மெடிசன் (சி.எஸ்.எம்.எம்.,)ல் தகுதியான இந்திய மாணவர்களுக்கு அத்துறை சார்ந்த நான்கு முக்கிய பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பும், ஆராய்ச்சி படிப்பும் உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவை அந்நாட்டுக் கல்வி நிறுவனம் துவக்கியுள்ளது.

பிரிவுகள்:
 நியூரோசயின்ஸ்
 மாலிக்குளர் மெடிசன்
 மெடிக்கல் ஜெனிடிக்ஸ்
 பயோமெடிக்கல் ரிசர்ச்

உதவித்தொகைகள்:
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பான, எம்.எஸ்சி., படிப்பில் சேர 2,000 யூரோக்கள் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்பிற்கான கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு வழங்கப்படும். இவைகளை தவிர பிஎச்.டி., மாணவர்களுக்கு ஆராய்ச்சியின் ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித் தனியே உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
சி.எஸ்.எம்.எம்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பப் படிவத்துடன் கவனமாக இணைத்துப் பதிவு செய்யவும். ஏனெனில், சரியான தகவல்களை தெரிவிக்காத அல்லது போதிய ஆவணங்களை சமர்பிக்காதவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தகுதிகள்:
முதுநிலை படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பும், ஆராய்ச்சி படிப்பிற்கு முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

விபரங்களுக்கு: www.cing.ac.cy

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us