தாய்மொழி கல்வி மசோதா 20ம் தேதி தாக்கல் | Kalvimalar - News

தாய்மொழி கல்வி மசோதா 20ம் தேதி தாக்கல்மார்ச் 19,2015,10:41 IST

எழுத்தின் அளவு :

பெங்களூரு: தாய்மொழியில், தொடக்க கல்வி வழங்குவதை கட்டாயமாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட, ’தாய்மொழி கல்வி’ மசோதா, வரும் 20ம் தேதி, கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 



சபாநாயகர் திம்மப்பா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில், கூட்டத்தொடர் ஆலோசனை கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், தாய்மொழி கல்வி மசோதாவை, வரும் 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத் தொடரில், ஐந்து நாட்கள் பட்ஜெட் மீதான விவாதமும், மற்ற நாட்களில் கேள்வி நேரம், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், மார்ச் 30ம் தேதி, முதல்வர் சித்தராமையா பதிலளிக்கவும், ஒருமித்த கருத்து வெளியானது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us