கேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள் | Kalvimalar - News

கேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்

எழுத்தின் அளவு :

2013ம் ஆண்டு சி.ஏ.டி. தேர்வுக்கான பதிவு, ஆகஸ்ட் 5 ம் தேதி துவங்கி நடந்துவருகிறது. செப்டம்பர் 26ம் தேதி வரை பதிவுசெய்தல் நடைபெறுகிறது.

எம்.பி.ஏ., படிக்க விரும்புவோரின் முதல் தேர்வு ஐ.ஐ.எம்.,கள். அந்த கல்வி நிறுவனங்களில் இருக்கும் குறைந்த இடங்களுக்கு, ஏராளமான மாணவர்கள் போட்டியிடுகிறார்கள். ஆசை இருக்கும் அதேநேரத்தில், நாடு முழுவதும் CAT தேர்வு தொடர்பான சில நிலவரங்களையும் அறிந்துகொள்வது, நமது திட்டமிடலுக்கு துணை புரியும்.

IIM -களில் நுழைவதற்காக நடத்தப்படும் CAT தேர்வு நெருங்கிக் கொண்டுள்ளது. பொதுவாக, CAT தேர்வுக்கு பதிவு செய்தவர்களை விட, குறைவான நபர்களே, அத்தேர்வை எழுதுகிறார்கள். இதற்கு காரணம் பல. அன்றைய நாளில் ஏதேனுமொரு எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டிருக்கலாம் அல்லது சரியாக படிக்கவில்லை, அதனால் இப்போது எழுத வேண்டாம் என்று உறுத்தல் இருக்கலாம்.

ஆண்டு வாரியாக பதிவுசெய்தவர்கள் மற்றும் எழுதியோர் விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டு  -  பதிவு செய்தோர்  -  எழுதியோர்

2005  -  1.70 லட்சம்  -  1.55 லட்சம்

2006  -  1.91 லட்சம்  -  1.80 லட்சம்

2007  -  2.50 லட்சம்  -  2.30 லட்சம்

2008  -  2.90 லட்சம்  -  2.76 லட்சம்

2009  -  2.42 லட்சம்  -  2.30 லட்சம்

2010  -  2.04 லட்சம்  -  1.85 லட்சம்

2011  -  2.05 லட்சம்  -  1.86 லட்சம்

2012  -  2.15 லட்சம்  -  1.95 லட்சம்.

ஆண் - பெண் விகிதாச்சாரம்

கடந்த காலங்களில், CAT எழுதுவோரில், ஆண்களைவிட, பெண் தேர்வர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த 2013ம் ஆண்டிலும், CAT எழுதும் பெண்களின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பணி அனுபவஸ்தர்கள் (2012 விபரப்படி)

பணிஅனுபவ காலம் -  எழுதியோர்  -  சதவீதம்

0 - 6 மாத வரையிலான அனுபவம்  -  142512  -  66.6%.

6 மாதங்களுக்கு மேல்  -  71555  -  33.4%.

மேற்கூறிய விபரத்தின்படி, பணி அனுபவம் இல்லாத புதியவர்களுக்கு, எதிர்கால வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்ற நல்ல செய்தி கிடைக்கப்பெறுகிறது.

கல்விப் பின்புல விபரம் (2012 விபரப்படி)

துறை பின்னணி  -  எழுதியோர்  -  சதவீதம்

பொறியியல்  -  144760  -  67.33%

வேளாண்மை  -  919  -  0.42%

ஆர்கிடெக்சர்  -  974  -  0.45%

பார்மசூடிகல் சயின்ஸ்  -  1470  -  0.68%

சார்டர்ட் அக்கவுன்டன்சி  -  47  -  0.21%

ஹ¤மானிட்டீஸ்  -  3404  -  1.58%

மருத்துவம்  -  486  -  0.22%.

இந்த விபரப்படி பார்த்தால், பொறியியல் பின்னணி உடையவர்களே, கேட் தேர்வில் ஆதிக்கம் செலுத்துவது தெரியும். அதற்கடுத்து, மானுடவியல் பிரிவைச் சேர்ந்தவர்களும், மூன்றாவதாக, பார்மசூடிகல் சயின்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். IIM வகுப்பறைகளில், பொறியியல் மாணவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, அத்துறை சாராத மாணவர்களை ஈர்க்க, IIM -கள் பல சலுகைகளை அறிவித்துள்ளதை நாம் ஏற்கனவே அறிவோம்.

பூகோள வேறுபாடுகள்

மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட, நாட்டின் முதல் 5 நகரங்கள்தான், அதிகளவு CAT தேர்வர்களைக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்த தேர்வர்களில், அந்த நகரங்களின் பங்கு மட்டும் 40% என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், நாட்டின் பூகோள விகிதாச்சாரத்தில் சில சிக்கல்களும் ஏற்படுகின்றன. அனைத்துப் பகுதி மக்களும் இந்தப் போட்டியில் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டியுள்ளது.

பூகோள விகிதாச்சாரம் (2012 விபரப்படி)

நகரம்  -  தேர்வெழுதியவர்கள்  -  சதவீதம்

டெல்லி  -  21224  -  9.87%

பெங்களூர்  -  19553  -  9.09%

மும்பை  -  16895  -  7.85%

ஐதராபாத்  -  16138  -  7.50%

புனே  -  13368  -  6.21%

மாநில அளவிலான பதிவு விபரங்கள் (2012 விபரப்படி)

மாநிலம்  -  எழுதியவர்கள்  -  சதவீதம்

மகாராஷ்டிரா  -  31040  -  14.43%

உத்திரபிரதேசம்  -  25270  -  11.75%

டெல்லி  -  21507  -  10%.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us