கால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு | Kalvimalar - News

கால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு

எழுத்தின் அளவு :

இந்திய கால்நடை கவுன்சில், கால்நடை மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு, அரசு கால்நடை மருத்துவ கல்லுõரிகளில் உள்ள மொத்த இடங்களில், 15 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்காக நடத்தப்படுகின்றன. 5 ஆண்டு இளங்கலை கால்நடை அறிவியல் படிப்பிற்காக தேர்வு நடக்கிறது.

கல்வித் தகுதி: பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் போன்ற பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள், தற்போது பிளஸ் 2 படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள், 2013 டிச.,30 அன்று 17 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் படிவத்தை நேரிலோ, தபாலிலோ, குறிப்பிட்ட விஜயா வங்கி கிளைகளிலோ பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக (எஸ்.சி/எஸ்.டி.,  400 ரூபாய், மற்றவர்  800 ரூபாய்) ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பெற்று, அத்துடன் டிடி மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, பிப்.,15க்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் மே 11. விவரங்களுக்கு www.vci.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us