டென்மார்க்கில் இலவச கல்வி | Kalvimalar - News

டென்மார்க்கில் இலவச கல்விபிப்ரவரி 12,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியா உட்பட பிற நாட்டு மாணவர்களைக் கவரும் வகையில் டேனிஷ் நாட்டு அரசால் வழங்கப்படும் முதுநிலை படிப்பிற்கான உதவித்தொகை திட்டம் ’டேனிஷ் கவர்ன்மெண்ட் ஸ்காலர்ஷிப்’!

தங்கள் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும், பிற நாடுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களை தங்கள் நாட்டில் உயர்கல்வி பயில வைப்பதற்காகவும் டேனிஷ் நாட்டு அரசின் உயர்கல்வி மற்றும் அறிவியல் துறை அமைச்சகத்தால் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இதன்படி, டென்மார்க்கில் உள்ள சிறந்த பலகலைக்கழகங்களுள் ஒன்றான ‘யூனிவர்சிட்டி ஆப் சதர்ன் டென்மார்க்’ கல்வி நிறுவனத்தில் பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் என பல்வேறு பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பை தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் வழங்குகிறது.

துறைகள்:
* இன்ஜினியரிங் 
* ஹுமானிட்டீஸ்
* சயின்ஸ் 
* பிஸ்னஸ் அண்ட் சோஷியல் சயின்ஸ் 
* ஹெல்த் 

தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.  ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றவராக இருக்கக் கூடாது. 

உதவித்தொகைகள்:
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்குக் கல்வி கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். கூடுதலாக மாத செலவிற்காக படிப்பு காலம் நிறைவடையும் வரை ஒவ்வொரு மாதமும் 6,090 டேனிஷ் குரோன் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 66,000 ரூபாய்) வழங்கப்படும்.

தேர்வு முறை:
இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.

விபரங்களுக்கு: www.sdu.dk/en/uddannelse/tuition/scholarships

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us