அதிகரிக்கும் வெளிநாட்டு மோகம் | Kalvimalar - News

அதிகரிக்கும் வெளிநாட்டு மோகம்

எழுத்தின் அளவு :

கிராஜூவேட் ரெக்கார்டு எக்சாமினேசன் (ஜி.ஆர்.இ.,) என்பது, அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பல்கலைகளில், மேனேஜ்மென்ட் படிப்புகளைத் தவிர, பல்வேறு பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது.

இதற்கான சோதனைத் தேர்வை, உலகம் முழுவதும் "எஜூகேசனல் டெஸ்டிங் சர்வீஸ்" என்ற நிறுவனம் நடத்துகிறது. இந்நிறுவனம் அமெரிக்கா, நியூஜெர்சி மகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் நகரில் செயல்படுகிறது. தேர்வில், கணிதம், வெர்பல் ரீஷனிங், பகுத்துணரும் திறன் போன்றவற்றை மாணவர்களிடம் சோதிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்படும். 2,300 க்கு அதிகமான அமெரிக்கா பல்கலைகளில் பயில்வதற்கு, இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அவசியம். இதற்கான குறைந்த பட்ச கல்வித்தகுதியாக, பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதியாண்டு படிப்பவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

இந்தியாவில் டில்லி, கவுதம் நகரில் உள்ள "எல்வன் டெஸ்டிங் சர்வீசஸ்" சென்டரில் ஜி.ஆர்.இ., தேர்வுக்கு ரிஜிஸ்டர் செய்யப்பட்டு, செப்., முதல் டிச., வரை இந்தியாவில் ஆமதாபாத், சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட முக்கிய பத்து நகரங்களில் தேர்வுகள் நடந்தது. இத்தேர்வில், இந்தியர்களின் பங்கு 2011ம் ஆண்டைக் காட்டிலும், 2012ல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2012ல் 85,000 மாணவர்களும், 2011ல் 65,000 மாணவர்களும் ரிஜிஸ்டர் செய்துள்ளனர்.

இது குறித்து ஜி.ஆர்.இ., அதிகாரி "டேவிட் பெய்ன்" கூறுகையில், இந்தாண்டு இந்தியாவில் ஜி.ஆர்.இ., தேர்வுக்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக டில்லி, ஐதராபாத் மாணவர்களும்,  தொடர்ந்து சென்னை, பெங்களூரு, மும்பை மாணவர்களும் விண்ணப்பித்து உள்ளனர். இத்தேர்வுக்காக இன்ஜினியரிங், மருத்துவம் ஆகிய பிரிவுகளின் கீழ் பயிற்சி நிறுவனங்களும் ஆங்காங்கே முளைவிட தொடங்கியுள்ளன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us