இத்தாலி ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

இத்தாலி ஸ்காலர்ஷிப்பிப்ரவரி 01,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியா உட்பட உலகில் 15 நாடுகளைச் சேர்ந்த இளநிலை பட்டதாரி மாணவர்களுக்கு இத்தாலியில் உள்ள ‘யூனிவர்சிட்டி ஆப் மாசராடா’ கல்வி நிறுவனத்தால் ‘இன்வஸ்ட் யுவர் டாலெண்ட் இன் இத்தாலி’ என்கிற உதவித்தொகையின் கீழ் முதுநிலை பட்டப்படிப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த கல்வி திட்டத்தின் மூலம் திறமையான மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான முதுநிலை கல்வியை ‘பாலிடிக்ஸ் அண்ட் இண்டர்நேஷனல் ரிலேஷன்ஸ்’ துறைகளில் இத்தாலி நாட்டின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் வழங்கப்படவுள்ளது.

படிப்புகள்:
* இண்டர்நேஷன்ல் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக் ரிலேஷன்ஸ் (ஐ.பி.இ.ஆர்.,)
* இண்டர்நேஷனல் எகனாமிக் ரிலேஷன்ஸ் (ஐ.இ.ஆர்.,)
* இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் (ஐ.பி.,)

தகுதிகள்:
26 வயதிற்கு உட்பட்ட தேசிய அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் துறை சார்ந்த இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். ஜனவரி 31, 1993 தேதிக்கு முன் பிறந்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆங்கில மொழியில் குறைந்தது பி2 நிலை புலமை பெற்றவராக இருக்க வேண்டும். ஐ.இ.எல்.டி.எஸ்., டி.ஓ.இ.ஐ.சி., அல்லது டோபில் ஆகிய ஆங்கில தகுதி தேர்வு சான்றிதழ் அவசியம். ‘பாலிடிக்ஸ் அண்ட் இண்டர்நேஷன்ல் ரிலேஷன்ஸ்’ துறையில் முதுநிலை பட்டம் பெற விரும்புபவராக இருக்க வேண்டும்.

உதவித்தொகைகள்:
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி தொகையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் முதல் 9 மாதங்களுக்கு மாத செலவிற்காக 8.100 ஈயூரோக்கள் உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பப் பதிவை மாணவர்கள் ‘யூனிவர்சிட்டி ஆப் மாசராடா’ கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

தேர்வு முறை:
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் மாணவர்களை பல்வேறு தரநிலைகளின் அடிப்படையில் இத்தாலி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தேர்வு செய்து இந்த உதவித்தொகையை அக்டோபர் மாதம் முதல் வழங்கவுள்ளது.

விபரங்களுக்கு: http://gpr.unimc.it

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us