ஹோட்டல் மேலாண்மை துறை - நுழைவுத்தேர்வுகள், கல்வி நிறுவனங்கள் | Kalvimalar - News

ஹோட்டல் மேலாண்மை துறை - நுழைவுத்தேர்வுகள், கல்வி நிறுவனங்கள்

எழுத்தின் அளவு :

விருந்தோம்பல் துறையானது, இன்றைய நிலையில், உலகளவில் மிகவும் விஸ்தாரமாக வளர்ந்துவரும் ஒரு துறையாகும். நாளுக்கு நாள் வேகமடைந்து வரும் இத்துறைக்கு, தகுதிவாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. தற்போதைய நிலையில், 10ல் ஒருவர், இத்துறையில் பணிக்கு சேர்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறையானது, அதிகளவு வெளிநாட்டு வருமானத்தைப் பெறுவதில் 3ம் இடம் வகிக்கிறது. தற்போதைய நிலையில் 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது.

வரும் 2014ம் ஆண்டு, ஹோட்டல் துறையில் மட்டும் 250 மில்லியன் பணிகள் உருவாகக்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தவகையில் பார்த்தால், உலகின் மொத்த பணிகளில், இந்த எண்ணிக்கை 10% ஆகும். மேலும், டிராவல் அன்ட் டூரிஸம் கவுன்சில், வரும் 2013ம் ஆண்டில், இந்தியாவில், இத்துறையின் பணிகள் சுமார் 16 மில்லியன் என்ற அளவில் அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

இத்துறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்

National Council for Hotel management and Catering Technology என்ற நிறுவனம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில், 3 வருட பட்டப் படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க, அகில இந்திய கூட்டு நுழைவுத்தேர்வை நடத்துகிறது. இக்கல்வி நிறுவனத்திற்கு, இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. நுழைவுத்தேர்வானது, பொதுவாக, ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்படுகிறது.

தகுதிகள்

வயது வரம்பு - அதிகபட்ச வயதுவரம்பாக 22 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவு மாணவர்களுக்கு, 25 வயதுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

UGAT (Under graduate aptitude test)

இளநிலை திறனாய்வுத் தேர்வானது, மே மாதம் நடத்தப்படுகிறது. இத்தேர்வின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் கல்வி நிறுவனங்கள்,

Dina institute, pune
Desh Bhagat institute of hotel management and computer science
SAMS institute of hotel management, Varanasi
Maharishi Arvind institute of hotel management and Catering technology, Jaipur
Lourdes Matha institute of hotel management and Catering technology, Thiruvandrum

போன்றவை.

தகுதிகள்

வயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

DTE HMCT

மகாராஷ்டிராவின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம், இந்தத் தேர்வை நடத்துகிறது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி ஆகியவற்றில், 4 வருட பட்டப்படிப்பில் மாணவர்களை சேர்க்க, இத்தேர்வு நடத்தப்படுகிறது.

AJMVPS institute of hotel management and Catering technology college
Mahatma Gandhi vidhyamandir college of hotel management and Catering technology
Maharashtra state institute of hotel management and Catering technology
AISSMS college of HMCT

போன்ற கல்வி நிறுவனங்கள், இத்தேர்வு மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன.

தகுதிகள்

வயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

IIHM நுழைவுத்தேர்வு

ஹோட்டல் மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம், தான் வழங்கும் டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகளுக்காக, இத்தேர்வை நடத்துகிறது. இத்தேர்வு, மே மாதத்தில் நடத்தப்படுகிறது.

தகுதிகள்

வயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பாரதி வித்யாபீட் பல்கலைக்கழக ஹோட்டல் மேலாண்மைத் தேர்வு

மேற்கூறிய கல்வி நிறுவனம், தனது BHMCT and B Sc H & HA படிப்புகளுக்காக, இத்தேர்வை நடத்துகிறது. இத்தேர்வு, பொதுவாக, ஜுன் மாதத்தில் நடத்தப்படுகிறது.

தகுதிகள்

வயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வில் இரு மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us