சிம்பயோசிஸ் சட்டக் கல்லூரி நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

சிம்பயோசிஸ் சட்டக் கல்லூரி நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

சிம்பயோசிஸ் பல்கலையின் ஒரு பகுதியாக, சிம்பயோசிஸ் சட்டக் கல்லூரி, கடந்த 1977ம் ஆண்டு துவக்கப்பட்டது. இக்கல்லூரி, இந்திய பார் கவுன்சில் மற்றும் நாக் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சட்டக் கல்லூரியானது, தனது BA LLB and BBL LLB படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க SET தேர்வை நடத்துகிறது. இத்தேர்வை எழுத, ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் மற்றும் ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும்.

தகுதி

பள்ளி மேல்நிலைப் படிப்பில், ஒரே முயற்சியில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் எடுத்து தேறியிருக்க வேண்டும்(SC/ST பிரிவு மாணவர்களுக்கு 45% போதுமானது). 20 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக்கூடாது.

தேர்வு, பொதுவாக, மே மாதத்தில் நடைபெறும்.

தேர்வு

150 ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகளுடன் மொத்தம் 2.5 மணிநேரங்கள் இந்தத் தேர்வு நடைபெறும். லாஜிக்கல் ரீசனிங், அனலிடிகல் ரீசனிங், லீகல் ரீசனிங், பொதுஅறிவு மற்றும் Reading comprehension போன்ற பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

SET தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் இறுதித்தேர்வு நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு www.set-test.org என்ற வலைத்தளம் செல்க.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us