எல்சாட் - இந்தியா என்பது, ரீடிங் மற்றும் வெர்பல் ரீசனிங் திறமைகளை சோதிப்பதற்காக, அமெரிக்காவின் Law school admission council(LSAC) அமைப்பால் வடிவமைக்கப்பட்ட தேர்வு முறையாகும். இத்தேர்வு முறையானது, ஐஐடி - காரக்பூர் போன்ற பிரபலமான கல்வி நிறுவனங்களால், தங்களது சட்டப் படிப்புகளில் (5 வருட BA LL.B, 3 yrs LLB and LLM போன்றவை) மாணவர்களை சேர்க்க நடத்தப்படுகிறது.
இத்தேர்வுக்கான பதிவு கட்டணம் ரூ.3500. இக்கட்டணத்தை ஆன்லைன் அல்லது டிடி மூலமாக செலுத்தலாம்.
தகுதி
இந்தத் தேர்வை எழுத, எந்தவிதமான தனித்தகுதியும் பொதுவாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றாலும், தாங்கள் சேர விரும்பும் கல்வி நிறுவனங்கள் கோரும் கல்வித்தகுதிகளைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
நுழைவுத்தேர்வு, பொதுவாக, மே மாதத்தில் நடைபெறும்.
தேர்வு
Multiple சாய்ஸ் முறையில் இத்தேர்வு நடைபெறும். தேர்வின் மொத்த காலஅளவு 2 மணி 35 நிமிடங்கள். இடையில் 15 நிமிட இடைவெளி உண்டு. தேர்வு முடிவுகள், மாணவர்களுக்கு மட்டுமல்லாது, குறிப்பிட்ட கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். இதன்மூலம், மாணவர்கள், குறிப்பிட்ட கல்லூரியில், தங்களின் சேர்க்கை செயல்பாட்டை உடனடியாக தொடங்க முடியும்.
விரிவான விபரங்களை அறிய www.pearsonvueindia.com/lsatindia என்ற இணையதளம் செல்க.