சட்டம் படிப்பவர் பொதுவாக சுயமாக வக்கீலாக பயிற்சி செய்வதைப் பார்க்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் சிறப்புச் சட்ட ஆலோசனை நிறுவனங்களிலும் சேரலாம். பெரிய தொழில் நிறுவனங்களில் சட்ட அதிகாரியாகவும் பணியில் சேரலாம். மேலும் ராணுவத்திலும் அதன் சட்டப் பிரிவுகளில் பணியில் சேர முடியும்.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பயிற்சியாளராகவும் சட்டத் துறையை நிர்வகிப்பவராகவும் பணி புரியலாம். அரசின் பல துறைகளில் அவ்வப்போது அறிவிக்கப்படும் சட்ட அதிகாரி, சட்ட ஆலோசகர், சட்ட உதவியாளர் ஆகிய பணிகளிலும் சேரலாம். மாநில சட்டவியல் பிரிவுகளில் பணி வாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன.
பப்ளிசிங் நிறுவனங்களிலும் சட்டம் படித்தவருக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன.