ஹங்கேரியன் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

ஹங்கேரியன் ஸ்காலர்ஷிப்ஜனவரி 13,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, யு.ஜி.சி., உடன் இணைந்து ஹங்கேரிய நாட்டு அமைச்சகம், உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது!

ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி நாட்டுக் கல்வி நிறுவனங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு, ஹங்கேரி நாட்டு
மனிதவளத் துறை அமைச்சகத்தால் மாத உதவித்தொகையுடன், கல்வி கட்டணத்தில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தங்கும் வசதிகள் உட்பட மருத்துவ காப்பீடும் வழங்கப்படும்.

படிப்புகள்:
 இளநிலை (பி.ஏ., பிஎஸ்.சி.,) - 2 முதல் 4 வருடங்கள்
 முதுநிலை (எம்.ஏ., எம்.எஸ்சி.,) - 2 வருடங்கள் வரை
 ஒருங்கிணைந்த முதுநிலை (எம்.ஏ., எம்.எஸ்சி) - 5 - 6 வருடங்கள்
 டாக்டோரல் - 4 வருடங்கள்
 சிறப்பு படிப்புகள் - 1 வருடம்

தகுதிகள்:
இந்திய நாட்டுக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். 12ம் வகுப்பை ஆகஸ்ட் 1, 2018ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும். தகுதி தேர்வுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவராக இருக்க வேண்டும். ஏற்கனவே இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலம் படித்தவர்களாக இருக்கக் கூடாது.

வயது வரம்பு:
18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

உதவித்தொகை:
கல்வி கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதோடு, மாத செலவிற்காக, இளநிலை, முதுநிலை, ஒருங்கிணைந்த படிப்புகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு இந்திய பணமதிப்பின்பிடி, சுமார் 10 ஆயிரம் ரூபாயும், ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு முதல் 4 பருவங்களுக்கு மாதம் சுமார் 35 ஆயிரம் ரூபாயும்,  அதன் பிறகு சுமார் 45 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேலும், தங்கும் வசதிகளுக்காக மாதம் சுமார் 10 ஆயிரம் ரூபாயும், மருத்துவ காப்பீட்டிற்காக ஆண்டிற்கு சுமார் 16 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பப் பதிவை, யு.ஜி.சி., இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். நேரடியாக பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விபரங்களுக்கு: www.ugc.ac.in , http://studyinhungary.hu

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us