பி.எட். படிப்பைப் பொறுத்தவரை அஞ்சல் வழியில் படிப்பதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றில் குறைந்தது 2 ஆண்டுகள் ஏற்கனவே ஆசிரியராகப் பணி புரிந்திருப்பதுடன் தற்போதும் பணி புரிபவராக இருக்க வேண்டும். எனவே பட்டப் படிப்பைப் படித்து முடித்தவுடன் உங்களால் அஞ்சல் வழியில் பி.எட். படிப்பை உடனடியாக படிக்க முடியாது. பொய்யாகச் சான்றிதழ் கொடுத்தும் இதைப் படிக்க முடியாது. எனவே இதில் யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்.