பிரான்ஸ் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

பிரான்ஸ் ஸ்காலர்ஷிப்ஜனவரி 10,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

அயல்நாட்டு மாணவர்களுக்கு, பிரெஞ்சு அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் ஈபில் உதவித்தொகைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது.

ஈபில் ஸ்காலர்ஷிப் புரோகிராம்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறமை வாய்ந்த மாணவர்களுக்கு, பிரான்சில் உள்ள தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகளை உதவித்தொகையுடன் வழங்குவதே இந்த ஈபில் உதவித்தொகை திட்டம். குறிப்பாக, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

துறைகள்:
 சட்டம்
 பொருளாதாரம் மற்றும் மேலாண்மை
 பொறியியல்
 அரசியல்

படிப்புகள்:
 மாஸ்டர்ஸ் டிகிரி புரோகிராம் (முதுநிலை பட்டப்படிப்பு)
 பிஎச்.டி., (ஆராய்ச்சி படிப்பு)

கால அளவு:
முதுநிலை பட்டப்படிப்பில் 36 மாதங்கள் வரையும், பிஎச்.டி., படிப்பிற்கு 12 மாதங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்:
பிரெஞ்சு நாட்டுக் குடியுரிமை இல்லாதவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். பிரெஞ்சு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
முதுநிலை பட்டப்படிப்பிற்கு 30 வயதை மிகாதவர்களும், ஆராய்ச்சி படிப்பிற்கு 35 வயதை மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை:
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாத செலவிற்காக 1,181 யூரோ (சுமார் 94,500 ரூபாய்) வழங்கப்படும். மேலும், உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் விமானப் பயணச் செலவு, மருத்துவ காப்பீடும் அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
ஈபில் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்காக பிரெஞ்சு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

தேர்வு முறை:
மாணவர்கள் முந்தைய படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். மேலும், பிஎச்.டி., மாணவர்கள், அவர்கள் தேர்வு செய்துள்ள ஆராய்ச்சி தலைப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விபரங்களுக்கு: www.campusfrance.org/en/eiffel

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us