அடிப்படையில் இன்ஜினியிரிங் ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதை நான் எப்படி அறியலாம்? | Kalvimalar - News

அடிப்படையில் இன்ஜினியிரிங் ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதை நான் எப்படி அறியலாம்?ஜூன் 14,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

  • இன்று பலருக்கும் பொருந்தும் கேள்வி இது. அடிப்படையில் இன்ஜினியரிங் குணாதிசயம் நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பதை பின்வரும் கேள்விகளைக் கேட்டு அறியலாம்.  கணிதமும் அறிவியலும் போர் அடிக்கும் பாடங்களா?
  • எப்படி நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலானவை இயங்குகின்றன போன்றவற்றில் ஆர்வம் இல்லாதவரா?
  • எதையும் புதுமையாக செய்வதில் விருப்பம் இல்லாதவரா?
  • உனக்கு வரும் பரிசு ஒன்றில் ‘அசெம்பிள் செய்து பொருத்திக் கொள்ளவும்‘ என குறிப்பிட்டுள்ளது. அதை ஆர்வமாக பொருத்துவாயா மாட்டாயா?
  • கம்ப்யூட்டர்களிலும் வீடியோ கேம்களிலும் அதிக ஆர்வமில்லையா?
  • செய்தித்தாள்களில் வரும் பஸில்களை தீர்ப்பதில் எந்த ஆர்வமும் எப்போதும் இருப்பதில்லையா?
  • உன்னைச் சுற்றியுள்ளவர்கள் உனது முடிவுகளையும் கருத்துக்களையும் அதிகம் தவிர்க்கிறார்களா?
  • எதையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுவதில் சிரமம் இருக்கிறதா?
  • சுயமாக எதையும் செய்வதில் அதிகம் ஆர்வம் இல்லாதவரா?
  • பகுத்தாய்ந்து எதையும் கவனிப்பதிலும் யோசிப்பதிலும் ஆர்வம் இல்லையா?

இந்த கேள்விகளில் ஆமாம் என்ற பதிலுக்கு ஒரு மதிப்பெண் கொடுத்துக் கொள்ளலாம். எவ்வளவு அதிக மதிப்பெண் பெறுகிறோமோ அந்த அளவுக்கு நம்மிடம் இன்ஜினியரிங் குணாதிசயமும் அடிப்படை ஆர்வமும் இல்லை என்பதை அறியலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us