பட்டப்படிப்பு படித்து முடிக்கவிருக்கும் நான் சமூகப் பணி தொடர்பான மேற்படிப்பாக எதைப் படிக்கலாம்? | Kalvimalar - News

பட்டப்படிப்பு படித்து முடிக்கவிருக்கும் நான் சமூகப் பணி தொடர்பான மேற்படிப்பாக எதைப் படிக்கலாம்?ஜூன் 14,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கோயம்புத்தூரில் உங்களது பட்டப்படிப்பை முடிக்கவிருக்கும் நீங்கள் உங்களூரில் உள்ள புகழ் பெற்ற பெண்கள் கல்வி நிறுவனமான அவினாசிலிங்கம்பல்கலைக்கழகம் நடத்தவிருக்கும் படிப்பிலேயே நேரடி முறையில் சேரலாம்.

பட்டப்படிப்பில் புதுமையான படிப்புகளை தந்து வரும் அவினாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகம் 2008-2009ம் ஆண்டிலிருந்து மேலும் 2 புதிய பட்ட மேற்படிப்புகளை நடத்தவிருக்கிறது.

சமூகப்பணி தொடர்பான தொழிற்படிப்பான மாஸ்டர் ஆப் சோசியல் ஒர்க் (எம்.எஸ்.டபிள்யூ.) மற்றும் எம்.எஸ்சி. கவுன்சலிங் சைக்காலஜி ஆகிய 2 படிப்புகளுமே நீங்கள் விருப்பப்படும் துறையோடு தொடர்புடைய படிப்புகள்.

இந்த பல்கலைக்கழகம் எம்.எஸ்சி. ஐ.டி. மற்றும் எக்சிகியூடிவ் எம்.பி.ஏ., (இ-லேர்னிங்) ஆகிய படிப்புகளை ஏற்கனவே தந்து வருவதை அறிவீர்கள் என நம்புகிறோம். மல்டிமீடியா டிசைன் பிரிவில் பி.ஜி. டிப்ளமோ படிப்பையும் இது தந்து வருகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us