பிரேசில் உதவித்தொகை | Kalvimalar - News

பிரேசில் உதவித்தொகை ஜூலை 12,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

இளநிலை பட்டப்படிப்பிற்கான கல்வி கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கும், ‘பி.இ.சி.,- ஜி ஸ்காலர்ஷிப்’ எனும் பிரேசில் அரசின் உதவித்தொகை திட்டத்திற்கு, இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

முக்கியத்துவம்
வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த, உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள், பிரேசில் நாட்டில் உள்ள எந்த ஒரு பொது அல்லது தனியார் கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுக்கு இந்த உதவித் தொகை திட்டத்தின் கீழ், கல்வி கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.

தகுதிகள்:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும், பிளஸ் 2 வகுப்பின் பயிற்று மொழி பாடத்திலும் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம் உட்பட சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
18 வயது முதல் 23 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:
பிரேசிலில் சேர்க்கை பெற விரும்பும் கல்வி நிறுவனங்கள் எவையேனும், இரண்டை முன்னதாகவே தேர்வு செய்து வைத்திருக்க வேண்டும். பிரேசில் நாட்டின் தூதரகம் மூலமாக, பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். மாணவரது விருப்பம் குறித்த ஆலோசனைக்குப் பிறகு, பி.இ.சி.ஜி., உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.

நிபந்தனைகள்:
கல்வி கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்கு அளிக்கப்படுமே தவிர, வேறு எந்த சலுகையும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மாணவர்கள், தங்களது செலவிற்காக மாதம் குறைந்தது 400 அமெரிக்க டாலர்களுக்கு நிகரான ‘பிரேசிலியன் ரியல்’ வைத்திருக்க வேண்டும். மேலும், பிரேசில் சென்று படிப்பதற்கான மாணவர் விசா மட்டுமே வழங்கப்படுவதால், ஊதியம் பெறும் எந்தவொரு வேலையிலும் சேருவதற்கான அனுமதி கிடையாது. மீறினால் அந்த மாணவரது ‘ஸ்காலர்ஷிப்’ ரத்து செய்யப்பட்டு உடனே தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்.

விபரங்களுக்கு: http://www.indianembassy.org.br/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us