குறுகிய கால படிப்பு | Kalvimalar - News

குறுகிய கால படிப்புமார்ச் 15,2023,17:44 IST

எழுத்தின் அளவு :

போலந்தில் உள்ள வார்ஷா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பவர் அண்டு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு குறுகியகால படிப்பு திட்டத்தை வழங்குகிறது.பல்கலைக்கழக அறிமுகம்: 


1895ம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், சர்வதேச அளவிலான பரந்து விரிந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களின் திறனை வளர்ப்பதோடு மட்டுமின்றி, உலக அளவில் தாக்கதை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் கண்ணோட்டத்தையும், புத்தாக்க செயல்திறனையும் மெருகேற்றுகிறது. பவர் அண்டு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை 1960ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.படிப்பு: ரோபாடிக் பயன்பாட்டுடன் கூடிய ’மாடர்ன் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்’படிப்பு காலம்: ஜூலை 16 முதல் 28 வரைகட்டண விபரம்: ரூ.80 ஆயிரம்குறிப்பு: கல்விக் கட்டணம், தங்குமிட வசதி, ஏர்போர்ட்டிலிருந்து பல்கலைக்கழக வளாகம் உட்பட உள்ளூர் போக்குவரத்து வசதி.


விமானக் கட்டணம், விசா கட்டணம், உணவு இதர செலவுகள் இதில் அடங்காது.யார் பங்கேற்கலாம்:


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெச்சர் அண்டு பிளானிங், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், அடிப்படை தொழில்நுட்ப அறிவு, சுயமாக உருவாக்கப்பட்ட ’மினி புராஜெக்ட்’ஆகியவை மாணவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை: மாணவர்கள் அவர்களது விரிவான விண்ணப்பப் படிவத்தை துறை தலைவர் வாயிலாக சர்வதேச தொடர்பு மைய இயக்குனரிடம் சமர்பிக்க வேண்டும். விபரங்களுக்கு: www.annauniv.edu/pdf/mae.pdfAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us