மொரிஷியசில் உயர்கல்வி! | Kalvimalar - News

மொரிஷியசில் உயர்கல்வி!மே 17,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

எளிமையான வாழ்க்கை முறை, மலிவான கல்விக் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால், ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் சர்வதேச மாணவர்கள், அவர்களது இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்காக மொரிஷியஸை தேர்வு செய்கிறார்கள்!

மொரீசியஸின் சிறந்த கல்வி நிறுவனங்கள்

யூனிவர்சிட்டி ஆப் மொரிஷியஸ்:
பிரிட்டன் நாட்டுக் கல்வி முறையைப் பின்பற்றும் இப்பல்கலைக்கழகம், மொரிஷியசின் சிறந்த கல்வி நிறுவனங்களிலின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. அக்ரிகல்ச்சர், சோசியல் சயின்ஸ், இன்ஜினியரிங், இன்பர்மேஷன் கம்யூனிகேஷன், லா அண்ட் மேனேஜ்மெண்ட், சயின்ஸ் மற்றும் யூமானிட்டீஸ் ஆகிய ஆறு முக்கிய துறைகளை கொண்டுள்ளது. சென்டர் பார் இன்பர்மேஷன் அண்ட் டெக்னாலஜி சிஸ்டம், சென்டர் பார் இன்னோவேடிவ் லைப்லாங் லேர்னிங், சென்டர் பார் பயோ-மெடிக்கல் அண்ட் பயோ-மெட்டீரியல்ஸ் ரிஸர்ச், சென்டர் பார் ரிசர்ச் ஆன் சிலேவரி அண்ட் இண்டென்ச்சர் என நான்கு சிறப்பு மையங்களையும் பெற்றுள்ளது.

மிடில்செக்ஸ் யூனிவர்சிட்டி:
நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகத்தில், அக்கவுண்டிங் அண்ட் பினான்ஸ், கம்ப்யூடிங், அட்வர்டைஸ்மென்ட் அண்ட் மீடியா, பிசினஸ், பப்ளிக் ரிலேஷன், சைக்காலஜி அண்ட் கவுன்சிலிங் ஆகிய துறைகள் பிரபலம். மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் நீச்சல், கால்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுகளில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாலெட்ஜ்-பேஸ்ட் டிரைனிங் சென்டர்:
கே.பி.டி.சி., எனப்படும் இது மொரிஷியஸ் அரசாங்கத்தின் கல்வி திட்டங்களுள் ஒன்று. மொரிஷியன் இன்ஸ்டிடியூட் பார் டிரைனிங் அண்ட் டெவலப்மண்ட் (எம்.ஐ.டி.டி.,)-ன் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இங்கு, இன்ஜினியரிங், ஹோட்டல் டிரேட்ஸ், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆகிய பட்டப்படிப்புகளும் ஹேர் டிரஸ்சிங், பியூட்டி தெரபி மற்றும் பாடி மசாஜ் போன்ற சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகிறது.

வாட்டல் ஹோட்டல் அண்ட் டூரிசம் பிசினஸ் ஸ்கூல்:
இக்கல்வி நிறுவனம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் 96 சதவீதத்தினர் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். மொரிஷியசில் உள்ள பல பெரிய ஹோட்டல்களுடன் நல்ல இணக்கம் கொண்டிருப்பதோடு, மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை 4 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களில்  நடத்துகிறது.

அண்ணா மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் சென்டர்:
மொரிஷியஸ் அரசங்கத்தின் கீழ் யூனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜியுடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனம், மருத்துவம் சார்ந்த துறைகளில், பல்வேறு படிப்புகளையும், ஆராய்ச்சி வாய்ப்புகளையும் வழங்குகிறது.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us