அமெரிக்க பல்கலையுடன் கால்நடை மருத்துவ பல்கலை ஒப்பந்தம் | Kalvimalar - News

அமெரிக்க பல்கலையுடன் கால்நடை மருத்துவ பல்கலை ஒப்பந்தம்பிப்ரவரி 14,2009,17:43 IST

எழுத்தின் அளவு :


தூத்துக்குடி: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமெரிக்கா பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.


தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மீன்நச்சுயிரி ஆய்வகம், கெழுத்திமீன் குஞ்சுபொரிப்பகம் ஆகியவற்றிற்கான புதிய கட்டடங்களை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜூ திறந்துவைத்தார்.


அப்போது அவர் கூறியதாவது: 1979ல் துவக்கப்பட்ட தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மத்திய அரசின் நிதியுதவியில் 26 ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த ஆண்டிலும் 4 புதிய ஆய்வுப்பணிகளுக்கு நிதிஒதுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக கடல்விரால் வளர்ப்பு தொழில்நுட்பம், கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் அங்கிருந்து மீன்களை கொண்டுவர ஐஸ்பேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மீனவ கிராமங்களில் சோதனை அடிப்படையில் ஐஸ் பேக்குகள் அறிமுகப்படுத்தப்படும்.


மேலும் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மீன் உறைவிந்து மையமும் ஏற்படுத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மீன்வளக்கல்லூரியின் ஆராய்ச்சியின்படி வண்ணமீன்களின் கலரை அதிகப்படுத்துவது, சிங்கி இறாலை கொழுக்க வைப்பதுபோன்ற தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையும் அமெரிக்காவில் உள்ள லெப்ரஸ்கா பல்கலையும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான பி.டெக்.,படிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்கின்றன. இதன் மூலம் தமிழக மாணவர்கள் 4ம் ஆண்டில் அங்கு சென்று பயிலும் வாய்ப்புள்ளது. இளங்கலை கால்நடை படிப்புகளை இ-லெர்னிங் முறையில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.


கோழிவளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து பி.டெக்.,.படிப்பு துவக்கவேண்டுமென நாமக்கல் பகுதியில் இருந்து கோரிக்கைவைத்துள்ளனர். அதுபற்றியும் ஆராயப்படும் என்றார். பேட்டியின் போது தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி டீன் வெங்கட்ரமணி உடன் இருந்தார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us