இந்திய ராணுவத்தில் சேர ஆசையா? | Kalvimalar - News

இந்திய ராணுவத்தில் சேர ஆசையா?ஜனவரி 02,2023,12:55 IST

எழுத்தின் அளவு :

இந்திய பாதுகாப்பு படைகளில் அதிகாரியாக சேவைபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு, உரிய பயிற்சியுடன் பணி வாய்ப்பும் கம்பைண்டு டிபன்ஸ் சர்வீசஸ் எக்சாமினேஷன் -1 எனும் தேர்வை எழுதுவதன் வாயிலாக கிடைக்கும். இத்தேர்வை யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
சேர்க்கை இடங்கள்:


இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் - 100


இந்திய கடற்படை அகாடமி, எழிமலா -  22


விமானப்படை அகாடமி, ஹதராபாத் - 32


ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமி, சென்னை - 187


என மொத்தம் 341 இடங்கள் இத்தேர்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன.
தகுதிகள்:


இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விதிமுறையின் அடிப்படையில் நேபாள நாட்டின் குடிமகனாகவும் இருக்கலாம். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு பாகிஸ்தான், இலங்கை, பர்மா, கிழக்கு ஆப்ரிக்க நாடுகள், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களாகும் இருக்கலாம். திருமணம் ஆகாதவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி:


இந்திய ராணுவ அகாடமி மற்றும் ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமிக்கு ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட இளநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு. இந்திய கடற்படை அகாடமியில் சேர ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு.இந்திய விமானப்படை அகாடமிக்கு ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதப்பாடங்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு.வயதுவரம்பு:


இந்திய ராணுவ அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமிகளுக்கு ஜனவரி 2, 2000 முதல் ஜனவரி 1, 2005 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். விமானப்படை அகாடமிக்கு ஜனவரி 2, 2000 முதல் ஜனவரி 1, 2004 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமிக்கு ஜனவரி 2, 1999 முதல் ஜனவரி 1, 2005 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர், புதுச்சேரி, திருப்பதி, திருவனந்தபுரம், விஜயவாடா, டெல்லி, பெங்களூரு, மும்பை, மைசூரு, ஹதராபாத் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.தேர்வு முறை:


பொதுவாக, அனைத்து கல்லூரிகளிலும், ஆங்கில மொழி அறிவு - 100 மதிப்பெண், பொது அறிவு - 100 மதிப்பெண்களுக்கு பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், இந்திய ராணுவ அகாடமி, இந்திய கடற்படை அகாடமி, விமானப்படை அகாடமி ஆகியவற்றில் சேர துவக்கநிலை கணித அறிவும் - 100 மதிப்பெண்களுக்கு கூடுதலாக பரிசோதிக்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு: www.upsc.gov.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us