நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் | Kalvimalar - News

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்டிசம்பர் 02,2022,08:49 IST

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் என்.ஐ.டி., எனும் ’நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்’ கல்வி நிறுவனம், டிசைன் சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முக்கியத்துவம்:
கடந்த 2014ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டப்படி, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையால், ஒரு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

டிசைன் சார்ந்து பல்வேறு பிரிவுகளில் படிப்புகளை வழங்குவதோடு, அரசு, தனியார் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் லோகோ, போஸ்டர், அனிமேஷன் உட்பட ஏராளமான வடிவமைப்பு தேவைகளையும் இந்நிறுவனம் பூர்த்தி செய்கிறது. குறுகிய கால, நீண்ட கால படிப்புகளை வழங்குவது மட்டுமல்லாமல் தேசிய, சர்வதேச அளவிலான பயிலரங்குகள், கருத்தரங்குகள் வாயிலாகவும் வடிவமைப்பு துறையின் அனைத்து தளங்களிலும் இந்நிறுவனம் தவிர்க்க முடியாத அங்கமாகி உள்ளது.

கல்வி நிறுவன வளாகங்கள்: அகமதாபாத், ஆந்திரா, ஹரியானா, மத்திய பிரதேசம், பெங்களூரு மற்றும் அசாம்.

வழங்கப்படும் படிப்புகள்

இளநிலை பட்டப்படிப்பு:

பி.டெஸ்., - பேச்சுலர் ஆப் டிசைன் - 4 ஆண்டுகள்

பிரிவுகள்:

கம்யூனிகேஷன் டிசைன் - பிலிம் அண்டு வீடியோ கம்யூனிகேஷன், எக்சிபிஷன் டிசைன், அனிமேஷன் டிசைன், கிராபிக் டிசைன்.
இண்டஸ்டிரியல் டிசைன் - செராமிக் அண்டு கிளாஸ் டிசைன், பர்னிச்சர் அண்டு இண்டீரியர் டிசைன், புராடெக்ட் டிசைன்.
டெஸ்டைல், அப்பேரல், லைப்ஸ்டைல் அண்டு ஆக்சஷரி டிசைன் - டெக்ஸ்டைல் டிசைன்

தகுதிகள்:

2003, ஜூலை 1ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி., மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் கீழ் 2022-23ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பை நிறைவு செய்பவராக இருக்க வேண்டும். அறிவியல், கலை, வணிகவியல், சமூகவியல் என அனைத்து பிரிவினரும் பி.டெஸ்., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை பட்டப்படிப்பு:
எம்.டெஸ்., - மாஸ்டர் ஆப் டிசைன்

படிப்பு காலம்:
2.5 ஆண்டுகள்

பிரிவுகள்:

கம்யூனிகேஷன் டிசைன் - பிலிம் அண்டு வீடியோ கம்யூனிகேஷன், அனிமேஷன் டிசைன், கிராபிக் டிசைன், போட்டோகிராபி டிசைன்,

இண்டஸ்டிரியல் டிசைன் - செராமிக் அண்டு கிளாஸ் டிசைன், பர்னிச்சர் அண்டு இண்டீரியர் டிசைன், புராடெக்ட் டிசைன், டாய் அண்டு கேம் டிசைன், டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்டு ஆட்டோமொபைல் டிசைன், யுனிவர்சல் டிசைன்.

இண்டர்டிசிப்பிலினரி டிசைன் - டிசைன் அண்டு ரீடெயில் எக்ஸ்பிரியன்ஸ், ஸ்டேடெஜிக் டிசைன் மேனேஜ்மெண்ட்.

ஐ.டி., இண்டெக்ரேட்டர்டு - டிஜிட்டல் கேம், இன்டரேக்‌ஷன் டிசைன், இன்பர்மேஷன் டிசைன், நியூ மீடியா டிசைன்.

டெஸ்டைல், அப்பேரல், லைப்ஸ்டைல் அண்டு ஆக்சஷரி டிசைன் - டெக்ஸ்டைல் டிசைன், அப்பேரல் டிசைன், லைப்ஸ்டைல் ஆக்சஷரி டிசைன்.

தகுதிகள்:

1991, ஜூலை 1ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி., மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில் 3 அல்லது 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 4 ஆண்டு டிப்ளமா படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தற்போது இளநிலை படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எம்.டெஸ்., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

இதர படிப்புகள்:

குறுகிய கால, பவுண்டேஷன் புரொகிராம், பிஎச்.டி., மற்றும் சர்வதேச படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் முறை:
டி.ஏ.டி., - டிசைன் ஆப்டிடியூட் டெஸ்ட் பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் ஆகிய தேர்வுகளின் வாயிலாக தகுதியானவர்கள் இப்படிப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
https://admissions.nid.edu/NIDA2023/Default.aspx எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு: www.nid.edu

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us