விரைவில் குரூப் 4 போட்டித் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்ரமணியன் | Kalvimalar - News

விரைவில் குரூப் 4 போட்டித் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்ரமணியன்ஆகஸ்ட் 27,2014,15:29 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பல துறைகளில் காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, விரைவில் குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல் பொறுப்பு) தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: குரூப் 2: கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, 1,064 காலி பணியிடங்களை நிரப்ப, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு 20 நாட்களில் வெளியிடப்படும். கால்நடை பராமரிப்பு துறையில் 686 டாக்டர்கள், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பணியை நிரந்தரப்படுத்தும் வகையில், விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்.

மேலும், 385 பணியிடங்கள், நேரடியாக நிரப்பப்படும். பல துறைகளில், குரூப் 4 நிலையில் (தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள்), காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு 40 நாட்களில் வெளியிடப்படும். உரிமையியல் நீதிபதி பதவியில் 162 பணியிடங்களை நிரப்ப, இன்று (நேற்று), அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல், வரும் செப்டம்பர் 21ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளம் வழியாக, தேர்வுக்கு பதிவு செய்யலாம். வரும் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் ஒரு நாளைக்கு, இரு தாள் வீதம், இரு நாளும் சேர்த்து, நான்கு தாள்களுக்கு தேர்வு நடக்கும். தலா 100 மதிப்பெண் வீதம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். பின் 60 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். பி.எல்., முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

I LOVE POLICE JOB & I LIKE THIS JOB
by viswa,India    13-அக்-2014 01:04:46 IST
டியர் சார், எப்போ போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எக்ஸாம் varapothu?
by தனசேகர்,India    28-செப்-2014 16:51:58 IST
வி.எ.ஒ ரிசல்ட் எப்போது வரும
by Meena,India    26-செப்-2014 15:24:08 IST
எப்பொழுது Group 2 Non-Interview result?
by jayakumar,India    26-செப்-2014 12:26:08 IST
I love police . I like police job
by Priyapandiyan,India    06-செப்-2014 08:57:15 IST
வணக்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்று எனது லைப் பிளான். ஆனால் இன்னும் announcement வரவில்லை . enathu ஏஜ் 27 வந்துவிட்டது. நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். போலீஸ் ஆகி திறம்பட செய்ய சான்ஸ் கொடுங்கள். ப்ளீஸ்
by கருப்பசாமி,India    05-செப்-2014 17:27:23 IST
தமிழ்நாடு அரசு போலீஸ் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப எப்போது தான் இந்த அரசு கவனம் செல்லுத்தும்? இவர்களால் எங்களைப் போன்ற இளைஞர் வாழ்கையில் காத்திருந்து காத்திருந்து காலம் தான் வீணாகிறது...
by PANDIYARAJAN,India    27-ஆக-2014 19:36:34 IST
வருடா வருடம் அறிவிப்பு மட்டும் தான் வருது ... உதவி ஆய்வாளர் போஸ்டிங் எப்போ போட போறங்கனு தெரியல, வெறும் அறிவிப்புகள நம்பி ஏமாந்து தான் இளைங்கர்கள் இருக்காங்க ..... இதுக்கு யாரு ஸ்டெப் எடுப்பங்கனு தெரியல ...
by balsingh,India    27-ஆக-2014 14:01:39 IST
2011 பட்ஜெட் உரையில் உதவி காவல் ஆய்வாளர் தேர்வு அறிவிப்பு வந்தது. அனால் இன்று வரை அதற்கான எந்த அறிகுறியும் தெரியல்ல. அனால் இந்த 2014 லிலும் வெட்டி அறிவிப்பு மட்டுமே வந்தது, நாங்கள் தேர்விற்காக 2011 லிருந்து காத்திருக்கிறோம். தயவுசெய்து எங்களுக்காக நீங்கதான் உதவி செயினும் .வயதும் உயர்கிறது ப்ளீஸ்
by sathiyamoorthy,India    27-ஆக-2014 11:06:50 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us