காலநிலை ஆராய்ச்சிக்கு உதவித்தொகை | Kalvimalar - News

காலநிலை ஆராய்ச்சிக்கு உதவித்தொகைஏப்ரல் 17,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியா மற்றும் அமெரிக்காவின் காலநிலை பற்றி ஆராய்ச்சி செய்யும் இந்தியர்களுக்காக இரண்டு முக்கிய உதவித்தொகை திட்டம் வழங்கப்படுகிறது!

அறிமுகம்: கடந்த 2014 செப்டம்பரில், அமெரிக்க ஜனாதிபதியும், இந்திய பிரதமரும் இணைந்து வெளியிட்ட, இருநாடுகளில் நிலவும் பருவநிலை மாற்றங்கள் குறித்த கூட்டறிக்கையின் தொடர்ச்சியாக, தட்பவெட்ப நிலை மாற்றங்கள் குறித்த புரிதலை மக்களிடையே கொண்டு வரும் நோக்கில், காலநிலை தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டது. அதுவே, ‘புல்பிரைட் - கலாம் கிளைமெட் பெலோஷிப்’ எனும் கல்வி உதவித்தொகை திட்டம்!

புல்பிரைட் - கலாம் கிளைமெட் பெலோஷிப் பார் டாக்டோரல் ரிசர்ச்
காலநிலை குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியில் பிஎச்.டி., பட்டம் பெற விரும்பும் இந்தியர்களுக்கான உதவித்தொகையுடன் கூடிய புதிய கல்வி திட்டம் இது!

தகுதிகள்: ஏதேனும் ஒரு இந்திய கல்வி நிறுவனத்தில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதிக்கும் முன்னதாக, பிஎச்.டி., பதிவு செய்தவராக இருக்க வேண்டும். ஏற்கனவே பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் அல்லது பிஎச்.டி., பட்டத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளை முடிக்கும் தருவாயில் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.

உதவித்தொகை: 6 முதல் 9 மாதங்கள் கால அளவு கொண்டது. ஜே-1 விசாவுடன் சர்வதேச விமான பயணக் கட்டணம், மாதாந்திர செலவுகளுக்கான தொகை மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

புல்பிரைட் - கலாம் கிளைமெட் பெலோஷிப் பார் போஸ்ட் டாக்டோரியல் ரிசர்ச்
இந்தியாவைச் சேர்ந்த காலநிலை பற்றி ஆராய்ச்சி செய்யும் பிஎச்.டி., பட்டம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை திட்டம் இது!

தகுதிகள்: கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் அதாவது, 2014 ஜூலை 16 முதல் 2018 ஜூலை 15ம் தேதிக்குள், பிஎச்.டி., பட்டம் பெற்ற அல்லது பெற உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை:  8 முதல் 12 மாதங்கள் வரை கால அளவு கொண்டது. ஜே-1 விசா, சர்வதேச விமான பயணத் தொகை, மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. ஆராய்ச்சி மேற்கொள்பவரின் துணைக்கும் கூடுதலாக 80 சதவீதம் வரை பயண செலவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இரண்டு கல்வி திட்டத்திற்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு: www.usief.org.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us