நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் | Kalvimalar - News

நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் மே 06,2022,20:08 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் கான்பூரில் செயல்படும் நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் 1936ம் ஆண்டு இம்பெரியல் இன்ஸ்டிடியூட் ஆப் சுகர் டெக்னாலஜி எனும் பெயரில் துவக்கப்பட்டது. தொடர்ந்து, பலவேறு மாற்றங்களுக்கு பின், 1957ம் ஆண்டு இந்திய அரசால் நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் என பெயர் மாற்றப்பட்டது.
சிறப்புகள்:


சுகர் படிப்புகளுக்கு என்ற பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் தரமான கல்வி மற்றும் பயிற்சி, உயர்தர ஆராய்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை குறிக்கோள்களாக கொண்டு செயல்படுகிறது. வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் திட்டங்கள், உதவித்தொகை வாய்ப்புகள் மற்றும் சர்வதேச வேலை வாய்ப்புகள் அகியவற்றை வழங்கும் இந்நிறுவனம் சுகர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதோடு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மாநாடுகளையும் நடத்தி, பல்வேறு சவால்களுக்கும் தீர்வு காண முயன்று வருகிறது.ஆய்வகங்கள்:


எக்ஸ்பிரிமெண்டல் சுகர் பேக்டரி, பிசிக்கல் கெமிஸ்ட்ரி ஆய்வகம், பயோ கெமிஸ்ட்ரி ஆய்வகம், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி ஆய்வகம், சுகர் தொழில்நுட்ப ஆய்வகம், ஆட்டோமேஷன் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆய்வகம் ஆகியவற்றைக் கொண்டு, தொழில் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப தீர்வையும் அளிக்கிறது.வழங்கப்படும் படிப்புகள்:முதுநிலை டிப்ளமா படிப்புகள்:


பி.ஜி.டிப்ளமா - சுகர் இன்ஜினியரிங்


பி.ஜி.டிப்ளமா - சுகர் டெக்னாலஜி


பி.ஜி.டிப்ளமா - இன்டஸ்ட்ரியல் பெர்மென்டேஷன் அண்ட் ஆல்கஹால் டெக்னாலஜி


பி.ஜி.டிப்ளமா - சுகர்கேன் புரொடக்டிவிட்டி அண்ட் மெச்சூரிட்டி மேனேஜ்மெண்ட்


பி.ஜி.டிப்ளமா - இன்டஸ்ட்ரியல் இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் புராசஸ் ஆட்டோமேஷன்


பி.ஜி.டிப்ளமா - குவாலிட்டி கன்ட்ரோல் அண்ட் என்விரான்மென்டல் சயின்ஸ்சான்றிதழ் படிப்புகள்:


சுகர் பாய்லிங் 


சுகர் இன்ஜினியரிங் 


குவாலிட்டி கன்ட்ரோல்பெல்லோஷிப் படிப்புகள்:


எப்.என்.எஸ்.ஐ., - சுகர் டெக்னாலஜி அல்லது சுகர் கெமிஸ்ட்ரி


எப்.என்.எஸ்.ஐ., - சுகர் இன்ஜினியரிங்


எப்.என்.எஸ்.ஐ., - பெர்மென்டேஷன் டெக்னாலஜிதகுதிகள்:


முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு குறிப்பிட்ட அறிவியல் பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். சான்றிதழ் படிப்புகளில் சேர்க்கை பெற படிப்பிற்கு ஏற்ப பிளஸ் 2 அல்லது டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கை முறை:


முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு வாயிலாகவும், பெல்லோஷிப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேர்முகத்தேர்வு வாயிலாகவும் நடைபெறுகிறது.நுழைவுத்தேர்வு மையங்கள்: புனே, சென்னை, டில்லி, கான்பூர், கொல்கத்தா, பாட்னா, மீரட் மற்றும் கோரக்பூர்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 27விபரங்களுக்கு: http://nsi.gov.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us