டி.ஏ.ஏ.டி., உதவித்தொகைகள் | Kalvimalar - News

டி.ஏ.ஏ.டி., உதவித்தொகைகள்மே 06,2022,20:06 IST

எழுத்தின் அளவு :

ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் தகுதியுடைய சர்வதேச மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி வழங்கும் வகையில் பல்வேறு டி.ஏ.ஏ.டி., உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. கால அளவு: ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் 12 மாதங்கள் முதல் அதிகபட்சம் 36 மாதங்கள் வரையிலான கால அளவு கொண்ட படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை சலுகைகள்:


* ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.


* முதுநிலை மாணவர்கள் மாதாந்திர உதவித்தொகையாக 750 யூரோக்கள் வழங்கப்படுகின்றன.


* முனைவர் பட்டத்தின் கீழ் வரும் மாணவர்கள் மாதாந்திர உதவித்தொகையாக 1000 யூரோக்களை பெறலாம். 


* முனைவர் பட்டம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.


* முனைவர் மற்றும் முதுநிலை திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கு மேலும் சில பயண மானியங்கள் வழங்கப்படுகின்றன.


* பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் விடுதியில் தங்கும் வசதி முற்றிலும் இலவசம்.தகுதிகள்:


* இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சம் 6 ஆண்டு காலத்திற்கு உட்பட்ட படிப்பாக இருத்தல் அவசியம்.


* குறைந்தது துறை சார்ந்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம். 


* ஜெர்மன் அல்லது ஆங்கில மொழியில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப மொழி புலமை பெற்றிருக்க வேண்டும்.மொழிப் புலமை:


* ஜெர்மன் மொழியில் வழங்கப்படும் படிப்புகளுக்கு ஜெரிமன் மொழிப்புலமை பெற்றிருப்பது அவசியம்.


* பல்கலைக்கழகத்தின் தேவைக்கு ஏற்ப ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேவைப்படும் ஆவணங்கள்:


* முழுமையான சுய விபரத்தை தயாரித்து, அதில் கையால் கையொப்பமிட வேண்டும்.


* தற்போதைய பணி விபரங்களுடன், நோக்க கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.


* பல்கலைக்கழகங்கள் கேட்கும்பட்சத்தில், ஆராய்ச்சி முன்மொழிவை வழங்க வேண்டும்.


* முந்தைய பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற பரிந்துரை கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.


* பணிபுரிந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியிடம் இருந்து பெற்ற அனுபவக் கடிதம்.


* படிப்பை நிறைவு செய்த பிறகு, தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்ப செல்வதற்கான உத்தரவாதக் கடிதத்தை தேவைப்படும்பட்சத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை:


டி.ஏ.ஏ.டி., உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு: https://daadscholarship.com/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us