இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஏப்ரல் 29,2022,11:15 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கப்பல்துறை அமைச்சகத்தின் கீழ், கடந்த 2008ம் ஆண்டு சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.நோக்கம்: கடல்சார்ந்த வரலாறு, சட்டம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அவை சார்ந்த பிரிவுகளில் படிப்புகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வழங்குவதை பிரதான நோக்கங்களாகக் கொண்டு இப்பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.கல்வி வளாகங்கள்: நவி மும்பை, மும்பை துறைமுகம், கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, கொச்சி ஆகிய ஆறு இடங்களில் இப்பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, நாடு முழுவதும் 17 கல்வி நிறுவனங்கள் இப்பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.பல்கலை வழங்கும் படிப்புகள்:
இளநிலை பட்டப்படிப்புகள்:


பி.டெக்., - மரைன் இன்ஜினியரிங்


பி.டெக்., - நேவல் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்


பி.எஸ்சி., - நாட்டிக்கல் சயின்ஸ்


பி.பி.ஏ., - லாஜிஸ்டிக்ஸ், ரீடெயிலிங் மற்றும் இ-காமர்ஸ்


பி.எஸ்சி., - ஷிப் பில்டிங் மற்றும் ரிப்பேர்முதுநிலை பட்டப்படிப்புகள்:


எம்.டெக்., - நேவல் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்


எம்.டெக்., - டிரெட்ஜிங் மற்றும் ஹார்பர் இன்ஜினியரிங்


எம்.டெக்., - மரைன் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மெண்ட்


எம்.பி.ஏ., - இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்டேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்


எம்.பி.ஏ., - போர்ட் மற்றும் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்டிப்ளமா படிப்புகள்: 


டி.என்.எஸ்., - டிப்ளமா இன் நாட்டிக்கல் சயின்ஸ்


பி.ஜி.டி.எம்.இ., - போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மரைன் இன்ஜினியரிங்ஆராய்ச்சி படிப்புகள்:


பிஎச்.டி.,


எம்.எஸ்., - ரிசர்ச்தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். எனினும் பொதுவாக, பி.டெக்., பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல்தகுதியும், வயதுவரம்பும் உண்டு.சேர்க்கை முறை: ஐ.எம்.யு.,-சி.இ.டி., எனும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகங்களில் வழங்கப்படும் பி.பி.ஏ., படிப்புகள் தவிர பிற படிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன. தேர்வு மையங்கள்: கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இந்நுழைவுத்தேர்வுக்கான மையங்கள், சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பெங்களூரு உட்பட 84 நகரங்களில் அமைக்கப்படுகின்றன.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 16நுழைவுத்தேர்வு நாள்: மே 29விபரங்களுக்கு: www.imu.edu.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us