தரத்திற்கே முக்கியத்துவம்! | Kalvimalar - News

தரத்திற்கே முக்கியத்துவம்!ஏப்ரல் 20,2022,22:49 IST

எழுத்தின் அளவு :

நேரடி வகுப்புகளை நடத்த முடியாத ஊரடங்கு காலத்தில், கற்பித்தல் முதல் தேர்வு வரை அனைத்தும் ஆன்லைனே என்ற சூழலில் கல்வி நிறுவனங்களுக்கும் சரி, மாணவர்களுக்கும் சரி கொரோனா நிறைய கற்றுக்கொடுத்துள்ளன.கொரோனாவால் ஏராளமான சவால்களை சந்திக்க நேரிட்டாலும், மறுபுறம் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. மாற்றத்தை கிரகித்துக்கொண்டு, ஆன்லைன் வாயிலாகவும் எங்களால் ஏராளமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த முடிந்தது. தினமும் புதுப்புது முயற்சிகளில் ஈடுபட ஊக்குவிப்பதன் வாயிலாக, புதிய அம்சங்களை மாணவர்களுக்கு கற்பிக்க முடியும். இவை மட்டுமின்றி கற்றலில் ஆர்வம் அதிகரித்து, மாணவர்களால் உற்சாக செயல்படவும் முடியும். வியாபாரம் வேண்டாம்கல்வித்துறை என்பது லாபநோக்கமற்று, சமூக நலன் சார்ந்து செயல்பட வேண்டிய முக்கியமான ஒரு துறை. ஆனால், இன்று லாபத்தை வைத்தே மிகப்பெரும் வணிகம் கல்வித்துறையை சுற்றி நடப்பது வருத்தம் அளிக்கக்கூடியது. இதனால், நமது குழந்தைகளின் எதிர்காலம் மட்டும் இன்றி நாட்டின் எதிர்காலமும் பாதிக்கக்கூடிய அபாயம் உண்டு. கல்வி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல திடீரென தோன்றுவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு எண்ணிக்கையை அதிகரிப்பாதால் மட்டும் சமுதாயாத்திற்கு நன்மை அடையும் வாய்ப்பு மிக மிக குறைவு. எண்ணிக்கையை விட தரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இச்சூழலில், ஆராய்ச்சியாளர்கள், சிறந்த நிபுணர்கள், கல்வியாளர்களால் கல்வித்துறை நிர்வகிக்கப்பட வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளால் அல்ல என்பது எனது கருத்து. அரசியல்வாதிகளை விட, மாணவர்களுக்கு தேவையானவற்றை உணர்ந்த சிறந்த கல்வியாளர்களால் மென்மேலும் சிறப்பான அம்சங்களை ஏற்படுத்தித் தர முடியும்... கல்வித்துறையில் ஊழலுக்கான வாய்ப்பும் வெகுவாக குறையும். நற்பண்புகளை கற்றுக்கொடுங்கள்அடுத்ததாக, உலகிற்கே பண்பாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் நம் நாட்டில், அனைத்து பள்ளிகளிலும் நன்னெறி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். பெரியவர்களை, பெற்றோர்களை, பெண்களை மதிப்புடன் நடத்துவதில் இருந்து குழந்தைப் பருவத்தில் இருந்தே நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுப்பது மிக மிக அவசியம். பள்ளியில் தவரவிட்டு பிறகு, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நற்பண்புகள் கற்றுக்கொடுப்பது கடினம். -நித்யா ராமச்சந்திரன், துணை இணை செயலர், சங்கரா கல்வி நிறுவனங்கள், கோவை.
Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us