டான்செட் தேர்வு பற்றிக் கூறவும். | Kalvimalar - News

டான்செட் தேர்வு பற்றிக் கூறவும்.ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் எனப்படும் டான்செட் தேர்வு எம்.சி.., எம்.பி.., எம்.., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு. தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், பிற அரசு இன்ஜினியரிங் கல்லுõரிகளில் நடத்தப்படும் இப் படிப்புகளில் சேர இதுவே தகுதி தரும் தேர்வாக இருக்கிறது. இதை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. வேறு தனியார்

கல்லூரிகளும் சுய நிதிக் கல்லூரிகளும் கூட இதை தங்களது படிப்புகளுக்கான தகுதித் தேர்வாக எடுத்துக் கொள்கின்றன. இந்தப் படிப்புகளுக்குத் தகுதி தரும் படிப்புகளில் தற்போது இறுதியாண்டு அல்லது இறுதி செமஸ்டரில் படிப்பவரும் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கான மையங்கள்:

# Anna University Chennai
# Govt College of Technology, Coimbatore
# Thiagarajar College of Engg, Madurai
# Govt College of Engg, Salem
# Bishop Heber College, Trichy
# Govt. College of Engg, Tirunelveli
# Thanthai Periyar Govt. Institute of Technology, Vellore

இதற்கான விண்ணப்பத்தை அண்ணா

பல்கலைக்கழகத்திடமிருந்தோ அல்லது மேலே கூறப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்தோ மட்டுமே பெற முடியும். இந்த ஆண்டுக்கான இத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் முடிந்து விட்டது. ஆன்லைனிலும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இத் தேர்வு தொடர்பான முழு விபரங்களை www.annauniv.edu/zancez2008

இன்டர்நெட் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us