குழப்பம் வேண்டாமே! | Kalvimalar - News

குழப்பம் வேண்டாமே!ஏப்ரல் 08,2022,12:36 IST

எழுத்தின் அளவு :

பெருந்தொற்று கால ஊரடங்கு பொதுவாக பலருக்கும் சவாலான காலமாக இருந்தாலும் கல்வி நிறுவனங்களையும், மாணவர்களையும் பொறுத்தவரை சாதக, பாதகங்கள் இரண்டும் கலந்த காலமாகவே அமைந்தது.அனைத்தும் ஆன்லைனில் எளிதாக கிடைக்கும் இன்றைய சூழலில், பாடம் சார்ந்து மட்டுமின்றி பல பொதுவான தகவல்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றுள்ளனர். பெருந்தொற்று காலத்தில் ஆன்லைனை அதிகம் பயன்படுத்தி பழக்கப்பட்ட பிறகு, பெரும்பாலான மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்திற்கான பயனாளிகளாக மாறிவிட்டனர். ஆதலால், அத்தகைய மாணவர்களுக்கு ஆழ்ந்து கற்று, சிறப்பாக பாடம் நடத்தவேண்டிய கட்டாயம் இன்று பேராசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பெருந்தொற்று காலம் மாணவர்களுக்கு பல புதிய படிப்பினைகளை வழங்கிய அதேநேரம் சில பின்னடைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியும், கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகும், மாணவர்களை முறையாக ஆடை ஆணியச் செய்யவைப்பதில் இருந்து, பழைய பழக்க வழக்கத்திற்குள் திரும்ப கொண்டுவருவதில் சவால்கள் நிறைந்துள்ளன. ’மென்டார்ஷிப்'
ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிக்கப்படுவதோடு மட்டுமின்றி, ஆன்லைன் வாயிலாகவே மாணவர்களை மதிப்பீடு செய்யும் முறையையும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. ஆன்லைன் மதிப்பீடு எளிதாக இருப்பதோடு, மாணவரது அடுத்தகட்ட வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனினும், எங்கள் கல்வி நிறுவனத்தின் 10 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற முறையிலான 'மென்டார்ஷிப்’ திட்டத்தை ஆன்லைன் வாயிலாக பின்பற்றுவது சவாலாகவே அமைந்தது. ஏனெனில், வகுப்பறை வாயிலான நேரடி கல்வி முறையில் மாணவர்களது கல்வி திறன் மட்டுமின்றி ஒட்டுமொத்த செயல்திறனையும் தொடர்ந்து கண்காணிப்பதோடு, மேம்படுத்தவும் இத்திட்டத்தில் சாத்தியமானது. இரண்டு ஆண்டுகாலமாக ‘மென்டார்ஷிப்’ முறையில் மாணவர்கள் மீதான நேரடி கண்காணிப்பு வெகுவாக குறைந்து இருந்தது. தற்போது, அத்தகைய திட்டத்தை மீண்டும் பின்பற்றுகிறோம்.கல்லூரியை தேர்வு செய்தல்இந்திய கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றின் தரத்தையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் ஆராய்ந்து ’நாக்’ அமைப்பு சான்று அளிக்கிறது. அதேபோல், என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையும் கல்வி நிறுவனங்களின் தரத்தை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு படிப்பிற்கும் தரத்தின் அடிப்படையில் என்.பி.ஏ., சான்றும் வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்கும்பட்சத்தில், அத்தகைய சான்றுகளின் அடிப்படையில் மாணவர்கள் தரமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். 
-இந்து முருகேசன், துணை தலைவர், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை.
Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us