எம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா? | Kalvimalar - News

எம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பி.. படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர் தான் பலர் இருக்கிறார்கள். இன்ஜினியரிங் கல்லூரிக்கு தனது மகனையோ மகளையோ அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என தங்களின் சக்திக்கு மீறி ஆசைப்படுவோரும் பலர் இருக்கிறார்கள். ஆனால் தங்களது பிள்ளைகள் இதற்குத் தேவையான மதிப்பெண்களைப் பெறாத போது மனம் உடைந்து போகிறார்கள். இது போன்றவருக்கு கை கொடுக்கும் படிப்பு எம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு. இதை இன்ஜினியரிங் கல்லுõரியில் தான் படிக்க வேண்டும். 5 ஆண்டு படிப்பு. முழுக்க முழுக்க சாப்ட்வேர் துறைப் படிப்பு என்பதால் இதை நடத்தும் பல கல்லுõரிகளில் கேம்பஸ் இன்டர்வியூக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது இந்தப் படிப்பை தொழில் படிப்பாக பாங்குகள் கருதுவதால் இதற்கு கல்விக் கடனும் தரப்படுகிறது. எனவே இந்த ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பில் சேர்ப்பது குறித்து யாரும் யோசிக்க வேண்டியதேயில்லை. 700 மதிப்பெண்கள் முதல் 1000 மதிப்பெண்கள் வரை எடுத்த பல மாணவர்கள் இந்த ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்த பின் மிகச் சிறப்பாகப் படித்து பி.. முடித்தவருக்கு இணையான அல்லது கூடுதலான சாப்ட்வேர் வேலைகளைப் பெற்று வருகிறார்கள். எனவே எம்.எஸ்சி. சாப்ட்வேர் படிப்பு எப்போதும் உங்கள் மனதில் இருக்கட்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us