ஐ.ஐ.டி.,யின் சர்வதேச படிப்புகள்! | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,யின் சர்வதேச படிப்புகள்!மார்ச் 28,2022,09:11 IST

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டி., சென்னை, ஒன்பது  இன்டர்நேஷனல் இன்டர்டிசிப்பிலினரி முதுகலைப் பட்டப்படிப்புகளை சர்வதேச மாணவர்களுக்காக புதியதாக அறிவித்துள்ளது. முக்கியத்துவம்: பல்வேறு பொறியியல் துறைகளுக்கு இடையே உள்ள எல்லைகள் கலைந்து, பல துறைகளில் நிபுணர்களிடையேயான ஒத்துழைப்பை உள்ளடக்கியே தற்போதைய பிரச்னைகளுக்கான தீர்வுகள் காணப்படுகின்றன. உலகின் சமீபத்திய தேவைக்கு ஏற்ப, பொறியாளர்கள் தங்களது நிபுணத்துவத்தையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய சூழலுக்கு ஏற்பவும், பாரம்பரிய பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளின் அம்சத்தை உள்ளடக்கியும், இப்படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஐ.ஐ.டி., சென்னை தெரிவித்துள்ளது. சர்வதேச மாணவர்களுக்கான இந்த படிப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் கூடுதலாக இந்திய கலாச்சாரம் மற்றும் அடிப்படை ஆராய்ச்சி திறன்கள் பற்றிய பாடங்களையும் படிப்பார்கள். இரண்டாம் ஆண்டில், ஆராய்ச்சி அடிப்படையிலான முதுநிலை ஆய்வறிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.வழங்கப்படும் படிப்புகள்:


* அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் அண்டு நானோடெக்னாலஜி


* பயோமெடிக்கல் இன்ஜினியரிங்


* காம்ப்ளக்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டயனமிக்ஸ்


* கம்ப்யூட்டேஷனல் இன்ஜினியரிங்


* சைபர் பிசிக்கல் சிஸ்டம்ஸ்


* டேட்டா சயின்ஸ்


* எனர்ஜி சிஸ்டம்ஸ்


* குவாண்டம் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி


* ரோபாட்டிக்ஸ்கால அளவு: 2 ஆண்டுகள்தகுதிகள்: 4 ஆண்டுகள் கால அளவுகள் கொண்ட எந்த ஒரு பொறியியல் அல்லது அறிவியல் துறையை சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் அவர்களின் சொந்த ஆர்வத்துடன் பொருந்தக்கூடிய ’இண்டர்டிசிப்பிலினரி’ பாடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஆங்கில மொழிப்புலமை அவசியம். ஜூலை 2022க்குள் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டம் அல்லது அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய குடியுரிமை பெறாத வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் இப்படிப்புகளில் சேரலாம்.விபரங்களுக்கு: https://ge.iitm.ac.in/I2MP/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us