இன்ஸ்பயர் பெல்லோஷிப் | Kalvimalar - News

இன்ஸ்பயர் பெல்லோஷிப்மார்ச் 16,2022,11:40 IST

எழுத்தின் அளவு :

அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் போன்ற துறைகளை சேர்ந்த மாணவர்களிடம் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள உதவித்தொகை திட்டம், 'இன்ஸ்பயர் பெல்லோஷிப்’.அறிமுகம்: இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டி.எஸ்.டி., என சுருக்கமாக அழைக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இந்த உதவித்தொகையை வழங்குகிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும், திறமையான மாணவர்களை ஆராய்ச்சி பணிகளில் ஈர்ப்பதற்காகவும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 'நெட்’ எனும் தேசிய தகுதித் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு இணையாக நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர்வதற்கான வாய்ப்பை இத்திட்டம் வழங்குகிறது.தகுதிகள்:


எம்.எஸ்., / எம்.எஸ்சி., படிப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சி.ஜி.பி.ஏ.,  பெற்றுள்ள இன்ஸ்பயர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


 அல்லது 


இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் (தன்னாட்சி கல்லூரிகள் தவிர்த்து) பொறியியல், பார்மசி, வேளாண் அறிவியல் மற்றும் கால்நடை அறிவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில், முதுநிலை படிப்பிற்கான தேர்வுகளில் பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


அல்லது 


நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்திய குடியுரிமை பெற்ற மாணவர்களாக இருக்க வேண்டும். வயது 22 முதல் 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் இன்ஸ்பயர் பெல்லோஷிப்பிற்கான தகுதியை பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பெல்லோஷிப் விபரம்: இந்திய அரசின் விதிமுறைப்படி ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும். தகுதியுள்ள மொத்தம் ஆயிரம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் அல்லது பிஎச்.டி., பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் https://www.online-inspire.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே அனைத்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு: 


இ-மெயில்: inspire.prog-dst@nic.in 


தொலைபேசி: 0124-6690020, 0124- 6690021 Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us