இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் | Kalvimalar - News

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்மார்ச் 08,2022,12:44 IST

எழுத்தின் அளவு :

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.முதுநிலைபட்டப் படிப்புகள்:


மாஸ்டர் ஆப் டெக்னாலஜி - எம்.எடெக்., 


மாஸ்டர் ஆப் டிசைன் - எம்.டெஸ்.,


மாஸ்டர் ஆப் மேனேஜ்மெண்ட் - எம்.எம்ஜிடி., 


மாஸ்டர் ஆப் சயின்ஸ் - எம்.எஸ்சி., (லைப் சயின்சஸ் மற்றும் கெமிக்கல் சயின்சஸ்)


மாஸ்டர் ஆப் டெக்னாலஜி - எம்.எடெக்., (ஆன்லைன்)ஆராய்ச்சி படிப்புகள்:


பிஎச்.டி., மற்றும் எம்.டெக்., - ரிசர்ச்


ஒருங்கிணைந்த பிஎச்.டி., படிப்புகள்


மற்றும் ஸ்பான்சர்டு படிப்புகள்கல்வித்தகுதி:


எம்.டெக்., படிப்பில் சேர்க்கை பெற பி.இ., அல்லது பி.டெக்., படிப்புடன் கேட் தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எம்.டெஸ்., படிப்பில் சேர துறை சார்ந்த பிரிவில் பி.இ., / பி.டெக்., படிப்புடன் கேட் / சி.இ.இ.டி., அல்லது பி.டெஸ்., படிப்புடன் சி.இ.இ.டி., அல்லது பி.ஆர்க்., படிப்புடன் கேட் / சி.இ.இ.டி., தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எம்.எம்ஜிடி., படிப்பில் சேர பி.இ., / பி.டெக்., படிப்புடன் ஜி.ஏ.டி.இ., / சி.ஏ.டி., / ஜிமேட்., தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 


ஒருங்கிணைந்த பிஎச்.டி., படிப்புகளில் சேர துறை சார்ந்த பிரிவில் உரிய இளநிலை பட்ட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: மாணவர்களின் கல்வித்திறன், நுழைவுத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விபரங்களுக்கு: https://iisc.ac.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us