ஆக்குபேஷனல் இங்கிலிஷ் டெஸ்ட் | Kalvimalar - News

ஆக்குபேஷனல் இங்கிலிஷ் டெஸ்ட்பிப்ரவரி 03,2022,19:29 IST

எழுத்தின் அளவு :

முக்கியத்துவம்:


மருத்துவ துறையில் உயர்வாய்ப்புகளை பெற விரும்புபவர்களின் ஆங்கிலத்திறனை பரிசோதிக்கும் தேர்வாக, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துபாய், யு.கே., சிங்கப்பூர், மாலத்தீவுகள், மால்டா, பிலிப்பைன்ஸ், கத்தார், ஸ்பெயின், நமீபியா மற்றும் யுக்ரெய்ன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ, சுகாதார அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஓ.இ.டி., தேர்வை அங்கீகரித்துள்ளன.யார் எழுதலாம்: 


டென்டிஸ்ட்ரி, மெடிசன், நர்சிங், டயடெட்டிக்ஸ், ஆக்குபேஷனல் தெரபி, ஆப்தோமெட்ரி, பார்மசி, பிசியோதெரபி,  ஸ்பீச் தெரபி, வெர்ட்னரி சயின்ஸ் மற்றும் ரேடியோகிராபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவை சேர்ந்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.தேர்வு முறை:


வெளிநாட்டில் சென்று படிக்க அல்லது பணிபுரிய விரும்புவோர்க்கான ஆங்கில மொழித் திறன் தேர்வைப் போன்று, ஓ.இ.டி., தேர்விலும் புரிந்துகொள்ளுதல், வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் தேர்வர்களின் திறன் பரிசோதிக்கப்படுகின்றன. புரிந்துகொள்ளுதல் - 45 நிமிடங்கள், வாசித்தல் - 60 நிமிடங்கள், எழுதுதல் - 45 நிமிடங்கள், பேசுதல் - 20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்ட காலவரையறையுடன் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ துறை சார்ந்த தேர்வு என்பதால் அதற்கேற்றார் போல், இந்த தேர்வில் சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்திற்கு, எழுதும் திறனை சோதிக்க மற்ற தேர்வுகளில் பொதுவான ஒரு தலைப்பில் கட்டுரைகள் எழுத கேட்கப்படும். ஆனால், ஓ.இ.டி., தேர்வில் மருத்துவ பிரிவு சார்ந்த தலைப்பில் கட்டுரையோ அல்லது ‘கேஸ் ஸ்டடடியோ’ கேட்கப்படும். அதேபோல் பேசும் திறன் சோதனையில் விண்ணப்பதாரர்களுக்கு நோயாளிகளிடம் கலந்துரையாடுவதை போன்ற சூழல் கொடுக்கப்பட்டு சோதிக்கப்படுவர். உலகம் முழுவதிலும் 40 நாடுகளில், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. விபரங்களுக்கு: www.occupationalenglishtest.orgAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us