இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் | Kalvimalar - News

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஜனவரி 25,2022,11:47 IST

எழுத்தின் அளவு :

சர்வதேச தரத்தில் மீடியா கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்’!


அறிமுகம்:  யுனெஸ்கோ வல்லுனர்களின் உதவியுடன், மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ், 1965ம் ஆண்டு புதுடில்லியில் இக்கல்வி நிறுவனம் துவக்கப்பட்டது. தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக இயங்கும் இந்நிறுவனம், ஆரம்பக்கட்டத்தில், மத்திய பணிக்கு தேவையான தகவல்தொடர்பு அதிகாரிகளை உருவாக்கும் விதத்திலேயே படிப்புகளை வழங்கியது. தொடர்ந்து, 1969ம் ஆண்டு முதல் சர்வதேச தரத்திலான புதிய படிப்புகளை வழங்கி வருகிறது.


பிரின்ட் ஜர்னலிசம், போட்டோ ஜர்னலிசம், ரேடியோ ஜர்னலிசம், டெலிவிஷன் ஜர்னலிசம், டெவலப்மென்ட் கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன் ரிசர்ச், அட்வர்டைசிங், பப்ளிக் ரிலேஷன்ஸ் போன்ற பிரிவுகளில் கல்வியும், சிறப்பு பயிற்சிகளையும் வழங்கும் சிறந்த கல்விநிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 


வளாகங்கள்: ஒடிசா, மிசோரம், மகாராஷ்ட்டிரா, ஜம்மு, கேரளா


முதுநிலை டிப்ளமா படிப்புகள்: ரேடியோ மற்றும் டிவி ஜர்னலிசம், அட்வர்டைசிங் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஸ், ஆங்கிலம், இந்தி, ஒரியா, உருது மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் ஜர்னலிசம் படிப்பை வழங்குகிறது.


டிப்ளமா படிப்பு: டெவெலப்மெண்ட் ஜர்னலிசம்


குறுகிய கால படிப்புகள்: மீடியா கம்யூனிகேஷன், கார்ப்ரேட் கம்யூனிகேஷன், மீடியா ரிலேஷன்ஸ், கிரைசிஸ் கம்யூனிகேஷன், டிஜிட்டல் மீடியா, சோசியல் மீடியா, இண்டர்பர்ஷனல் கம்யூனிகேஷன், மீடியா மேனேஜ்மெண்ட், கிரியேட்டிவிட்டி, கம்யூனிகேஷன்ஸ் ரிசர்ச். 


இவை தவிர, இந்தியன் இன்பர்மேஷன் சர்வீசின் அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சிகள் - வளரும் நாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் போன்றவற்றையும் ஐ.ஐ.எம்.சி., ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.


தகுதிகள்: ஜர்னலிசம், அட்வர்டைசிங் அண்டு பப்ளிக் ரிலேஷன் ஆகிய முதுநிலை டிப்ளமா படிப்புகளில் சேர ஏதாவது ஒரு இளநிலை படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். 


சேர்க்கை முறை: 

நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வு டில்லி, புவனேஷ்வர், கோல்கட்டா, பாட்னா, லக்னோ, மும்பை, பெங்களூரு, கவுகாத்தி, சென்னை, கொச்சி, புனே உட்பட 25 நகரங்களில் நடைபெறுகிறது. 


விபரங்களுக்கு: http://iimc.nic.in/


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us