லீகல் அவுட்சோர்சிங் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தானா? | Kalvimalar - News

லீகல் அவுட்சோர்சிங் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தானா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

நிச்சயம் சிறப்பான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தான் லீகல் அவுட்சோர்சிங். இப்போது இதற்கான வாய்ப்புகள் அதிகம் உருவாகுவது பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து தான். தவிர லீகல் ரிசர்ச் நிறுவனங்கள், பன்னாட்டு சட்ட நிறுவனங்கள், லீகல் பப்ளிசிங் நிறுவனங்கள், சோலோ அட்டர்னி, அட்டர்னி அட் லா போன்ற வாய்ப்புகளும் அதிகம்.

இப்போது ஏராளமான சட்டப் பணிகள் இந்தியாவுக்கு அதிகம் அவுட்சோர்ஸ் செய்யப்படுகின்றன. திறன் வாய்ந்த பெரும் மக்கள் தொகையை இந்தியா கொண்டிருப்பது தான் இதற்குக் காரணம். தவிர ஆசியாவின் மிகப் பெரிய ஆங்கிலம் அறிந்த மக்கள் தொகை இருப்பதும் இங்கு தான். சட்டம் படித்து வெளிவருபவரின் எண்ணிக்கையும் அதிகம் தான். இவை எல்லாவற்றையும் விட இந்தியாவில் இது போன்ற பணிகளுக்காகத் தரப்படும் ஊதியமும் குறைவு. இன்னமும் நெறிப்படுத்தப்படவேண்டிய துறையாகவும் இது தான் இருக்கிறது.

திறன் வாய்ந்த வழக்கறிஞராக இருப்பது இதற்கான அடிப்படைத் தேவை. சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதும் மற்றும் புரிந்து கொள்ளும் திறனும் அவசியம். கடுமையான உடல் உழைப்புக்குத் தயாராக இருப்பதும் முக்கியம். 2015ம் ஆண்டுக்குள் லீகல் அவுட்சோர்சிங் துறையில் இந்தியாவில் 80 ஆயிரம் பேர் ஈடுபட்டிருப்பார்கள் என கணிக்கப்படுகிறது.

இப்போது இந்தியாவிலுள்ள சட்டக் கல்வி அவுட்சோர்சிங்கிற்கு முழுவதும் ஏற்றதாக இல்லை. லீகல் ரைட்டிங் எனப்படும் சட்ட விளக்கவுரைகளும் போதிய தரத்தில் இல்லை என நம்பப்படுகிறது. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து சட்டங்களை நம் நாட்டின் சட்டக் கல்வியில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட வேண்டியதும் இன்று உணரப்படுகிறது.

இவை செயல்படுத்தப்படும் போது ஆண்டுக்கு சாதாரணமாக 5 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக ஒருவர் வீட்டிலிருந்தபடியே பெற முடியும்.

இத் துறையில் லீகல் அவுட்சோர்சிங் நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us