ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் கேள்விகள் எப்படி அமைகின்றன? | Kalvimalar - News

ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் கேள்விகள் எப்படி அமைகின்றன? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

அகாடமிக் ஐ..எல்.டி.எஸ்., ஜெனரல் டிரெய்னிங் ஐ..எல்.டி.எஸ். என 2 வகையாக இந்தத் தேர்வைக் கூறலாம். வெளிநாடுகளில் படிக்க விரும்புவோருக்கும், நர்சுகளுக்கும், ஆசிரியர்களுக்குமான தேர்வு முதல் வகையைச் சேர்ந்தது. 2ம் வகைத் தேர்வு விசா மற்றும் குடியுரிமையோடு தொடர்புடையது.

லிஸனிங் காம்ப்ரிஹென்சன், ரீடிங் காம்ப்ரிஹென்சன், எழுதும் திறன், பேசும் திறன் ஆகிய 4 பகுதிகள் இதில் இடம் பெறுகின்றன. லிஸனிங் காம்ப்ரிஹென்சன் மட்டும் 35 முதல் 40 நிமிடங்களைக் கொண்டது. ரீடிங் காம்ப்ரிஹென்சன் ஒரு மணி நேர கால அளவைக் கொண்டது. ரைட்டிங் ஸ்கில் பகுதியோ ஒரு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டியது. பேசும் திறன் பகுதி பொதுவாக 20 நிமிடங்களைக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்வானது பொதுவாக சனிக்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் நடத்தப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us