அசிம் பிரேம்ஜி பல்கலை! | Kalvimalar - News

அசிம் பிரேம்ஜி பல்கலை!நவம்பர் 27,2021,21:55 IST

எழுத்தின் அளவு :

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் கீழ், பெங்களூருவில் கடந்த 2010ல் நிறுவப்பட்ட அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை உயர் தரத்துடன் வழங்குவதோடு, முன்மாதிரியான உயர்கல்வி நிறுவனமாக திகழ்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


வளாகங்கள்: பெங்களூரில் தற்போதுள்ள பல்கலைக்கழகத்தைப் போன்று இரண்டாவதாக, போபாலில் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து, நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மூன்றாவது பல்கலைக் கழகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


வழங்கப்படும் பட்டப்படிப்புகள்:


இளநிலை பட்டப்படிப்புகள்: 

பி.எஸ்சி., - இயற்பியல் 

பி.எஸ்சி., - உயிரியல்

பி.எஸ்சி., - கணிதம் 

பி.ஏ., - பிலாசபி 

பி.ஏ., - எக்னாமிக்ஸ் 

பி.ஏ., - இங்கிலிஷ் 

படிப்பு காலம்: 3 ஆண்டுகள்


இரட்டை பட்டப்படிப்பு: பி.எஸ்சி., பி.எட்., 

படிப்பு காலம்: 4 ஆண்டுகள்


முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.ஏ., - எக்னாமிக்ஸ் 

எம்.ஏ., - பப்ளிக் பாலிசி அண்டு கவர்னன்ஸ்

எல்.எல்.எம்., - லா அண்டு டெவெலப்மெண்ட் 

படிப்பு காலம்: 2 ஆண்டுகள்


டிப்ளமா படிப்புகள்: லேர்னிங் டிசெபிலிட்டி, இன்குலீசிவ் எஜுகேஷன், 


முதுநிலை டிப்ளமா படிப்பு: டெவெலப்மெண்ட் லீடர்ஷிப்


உதவித்தொகை: மாணவர்களின் ஆண்டு குடும்ப வருமானத்தைப் பொறுத்து,  கல்விக்கட்டணத்தில் 25 சதவீதம் முதல் 100 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது. ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.


மாணவர் சேர்க்கை: தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இவை தவிர, ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஏற்ப 5 முதல் 20 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்படுகிறது. 


விபரங்களுக்கு: https://azimpremjiuniversity.edu.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us