பி.எஸ்சி., பயோடெக்னாலஜியில் எனது மகன் படிக்கிறார். அடுத்ததாக எம்.எஸ்சி., செல்ல விரும்புகிறார். ஆனால் எனது குடும்பச் சூழலில் மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா?
ஏப்ரல் 27,2008,00:00 IST
கடந்த வாரம் நமது கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்டது போல பயோடெக்னாலஜி துறையின் வேலை வாய்ப்புகள் பட்டப்படிப்பு முடிப்பவரை விட பட்ட மேற்படிப்பு முடித்து மேலும் ஆய்வுக்குச் செல்பவருக்குத் தான் அதிகம் இருக்கிறது
. உங்கள் மகன் படிக்கும் கல்லுõரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு அதில் அவர் தேர்வு செய்யப்பட்டால் பிரச்னை இல்லை. நீங்களே குறிப்பிட்டிருப்பது போல உங்கள் மகன் சராசரியாகப் படிப்பவர் என்பதால் அவருக்கு எம்.எஸ்சி., படிப்பதன் மூலமாக மட்டுமே நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே போட்டித் தேர்வுகள் எழுதி இன்று அதிகமாக அறிவிக்கப்படும் பாங்குகள் போன்ற பணிக்குச் செல்ல அவரை தயார்படுத்துங்கள். எம்.எஸ்சி.,யையும் அவர்
சுமாராகப் படித்து 50 முதல் 60 சதவீத மதிப்பெண்களை பாடத்தில் நல்ல திறனில்லாமல் முடிக்கும் போது அதனால் அவருக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. இதை மனதில் கொண்டு முடிவு செய்யுங்கள். இன்றைய சூழலில் தகுதிகளுக்கு என எந்த வேலையும் கிடையாது. திறன்கள் தான் முக்கியம். பாடத்தில் நல்ல திறனில்லாத போது கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள்.