வன ஆராய்ச்சி நிறுவனம் | Kalvimalar - News

வன ஆராய்ச்சி நிறுவனம்நவம்பர் 19,2021,09:19 IST

எழுத்தின் அளவு :

வனவியல் மற்றும் சுற்றுச்சுழல் சார்ந்த பிரிவுகளில் சிறந்த கல்வியை வழங்குவதோடு, ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நோக்கில் எப்.ஆர்.ஐ., என சுருக்கமாக அழைக்கப்படும் 'பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ செயல்படுத்தப்பட்டுள்ளது.


முக்கியத்துவம்:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 1878ல் வனப் பள்ளியாக நிறுவப்பட்டு, பிறகு 1906ல் வன ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயரிடப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், வன அலுவலர்கள் மற்றும் வனப் பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. 


நாட்டில் வனவியல் ஆராய்ச்சியை மறுசீரமைத்து, 1988ல் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் - ஐ.சி.எப்.ஆர்.இ., உருவாக்கப்பட்ட பிறகு, இக்கல்வி நிறுவனத்திற்கு நிகர்நிலை அந்தஸ்து வழங்கப்பட்டது. 


விரிவாக்கத் திட்டங்கள் மூலம் மக்களிடையே வனம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.


வழங்கப்படும் முதுநிலைப் படிப்புகள்:


* எம்.எஸ்சி., பாரஸ்ட்ரி 

கல்வித்தகுதி: தாவரவியல், வேதியியல், கணிதம், இயற்பியல், விலங்கியல், புவியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் மூன்று ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அல்லது வேளாண்மை அல்லது வனவியல் இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


* எம்.எஸ்சி., வுட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி

கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுடன் இளநிலை பட்டப்படிப்பு அல்லது பி.எஸ்சி., பாரஸ்ட்ரி படிப்பில் குறைந்தது 50 சதவித மதிப்பெண்.


* எம்.எஸ்சி., என்விரான்மெண்ட் மேனேஜ்மெண்ட்

கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது வனவியல் அல்லது வேளாண்மை பட்டப்படிப்பு அல்லது பி.இ., சுற்றுச்சுழல் அறிவியலில் குறைந்தது 50 சதவித மதிப்பெண்.


* எம்.எஸ்சி., செல்லுலோஸ் அண்டு பேப்பர் மேனேஜ்மெண்ட் 

கல்வித்தகுதி: வேதியியல் பாடத்துடன் அறிவியல் பட்டப்படிப்பு அல்லது கெமிக்கல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவித மதிப்பெண்.


ஆராய்ச்சி படிப்புகள்: எம்.பில்., அல்லது பிஎச்.டி., படிப்பில் யு.ஜி.சி., நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி தகுதி பெற்றிருக்க வேண்டும். 


விபரங்களுக்கு: http://fridu.edu.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us