அறிவோம் என்.ஐ.எப்.டி.இ.எம்., | Kalvimalar - News

அறிவோம் என்.ஐ.எப்.டி.இ.எம்.,அக்டோபர் 29,2021,22:21 IST

எழுத்தின் அளவு :

இந்திய அரசால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ள 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் புட் டெக்னாலஜி என்டர்பிரனர்ஷிப் அண்ட் மேனேஜ்மெண்ட்’, உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வியில் பிரபல கல்வி நிறுவனமாகும்.


முக்கியத்துவம்:

பல்கலைக்கழக மானியக் குழுவின் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு இணையான அந்தஸ்தை பெற்றுள்ளதோடு மட்டுமின்றி, அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உணவு சார்ந்த படிப்புகளில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக செயல்படுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதோடு, தொழில் துறையினருக்கு உரிய அறிவுரைகளையும் இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.


வழங்கப்படும் படிப்புகள்:


இளநிலை பட்டப்படிப்பு:

பி.டெக்., - புட் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் 

படிப்பு காலம்:  4 ஆண்டுகள்


முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.டெக்., - புட் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் 

எம்.டெக்., - புட் புராசஸ் இன்ஜினியரிங் அண்ட் மேனெஜ்மெண்ட்

எம்.டெக்., - புட் சேப்டி அண்ட் குவாலிட்டி மேனேஜ்மெண்ட்

எம்.டெக்., - புட் சப்ளை சையின் மேனேஜ்மெண்ட்

எம்.டெக்., - புட் பிளாண்ட் ஆப்ரேஷனஸ் மேனேஜ்மெண்ட்


எம்.பி.ஏ.,  - இரட்டை மேஜர் படிப்பு

கட்டாய பாடம் - புட் அண்ட் அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட்.

மார்க்கெட்டிங், பினான்ஸ், இன்டர்நேஷனல் பிசினஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம்.


படிப்பு காலம்: 2 ஆண்டுகள்


ஆராய்ச்சி படிப்புகள்:

பிஎச்.டி., - அக்ரிகல்ச்சர் அண்ட் என்விரான்மெண்டல் சயின்சஸ் 

பிஎச்.டி., - பேசிக் அண்ட் அப்ளைடு சயின்சஸ்

பிஎச்.டி., - புட் இன்ஜினியரிங் 

பிஎச்.டி., - புட் பிசினஸ் மெனேஜ்மெண்ட் அண்ட் என்டர்பிரனர்ஷிப் டெவெலப்மெண்ட்

பிஎச்.டி., - புட் சயினஸ் அண்ட் டெக்னாலஜி


தகுதிகள்: 

பி.டெக்., படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜே.இ.இ., மெயின் 2021 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். 


எம்.டெக்., படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் நான்கு ஆண்டு பி.டெக்., படித்திருக்க வேண்டும். மேலும், கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வு அல்லது கேட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


எம்.பி.ஏ., படிப்பிற்கு இளநிலை பட்டப்படிப்புடன் கேட் அல்லது மேட் தேர்வு எழுதியிருக்க வேண்டும்.


பிஎச்.டி., படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், நெட் -ஜே.ஆர்.எப்., மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


உதவித்தொகை: அனைத்து படிப்புகளிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.


விபரங்களுக்கு: www.niftem.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us