நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்’ | Kalvimalar - News

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்’அக்டோபர் 29,2021,22:15 IST

எழுத்தின் அளவு :

டிசைன் சார்ந்த படிப்புகளுக்கு நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனமான 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்’, ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாகும்!


முக்கியத்துவம்: 

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சக்கத்தின் கீழ் செயல்படும் இக்கல்வி நிறுவனம், விஞ்ஞான மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொழில், தொடர்பியல், ஜவுளி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சர்வதேச தரத்திலான 'டிசைன்’சார்ந்த உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் செயல்படுகிறது.


வளாகங்கள்: 

ஆந்திரா, ஹரியானா, மத்திய பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் வளாகங்களைக் கொண்டுள்ள இக்கல்வி நிறுவனத்தின் தலைமை வளாகம் அகமதாபாத்தில் செயல்படுகிறது. மேலும், இதன் விரிவாக்க வளாகங்கள் காந்திநகர் மற்றும் பெங்களூருவில் உள்ளன.


வழங்கப்படும் படிப்புகள்:

பிரதானமான ஐந்து பிரிவுகளின் கீழ், 20 வகையான படிப்புகளை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு நிலைகளில் வழங்கப்படுகின்றன. 5 ஆண்டு பிஎச்.டி., படிப்பும் தற்போது அகமதாபாத் வளாகத்தில் துவங்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களின்படி, 55 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 'எக்ஸ்சேன்ஜ்’ படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 


இளநிலை பட்டப்படிப்பு: பேச்சுலர் ஆப் டிசைன் - பி.டெஸ்., 

படிப்பு காலம்: 4 ஆண்டுகள்


பிரிவுகள்: 

கம்யூனிகேஷன் டிசைன் - பிலிம் அண்ட் வீடியோ கம்யூனிகேஷன், எக்சிபிஷன் டிசைன், அனிமேஷன் பிலிம் டிசைன், கிராபிக் டிசைன் 

இண்ட்ஸ்டிரியல் டிசைன் - செராமிக் மற்றும் கிளாஸ் டிசைன், பர்னிச்சர் மற்றும் இண்டீரியர் டிசைன், புராடக்ட் டிசைன், 

டெக்ஸ்டைல், அப்பேரல், லைப்ஸ்டைல் அண்ட் ஆக்சசரி டிசைன் - டெக்ஸ்டை டிசைன்.


முதுநிலை பட்டப்படிப்பு: மாஸ்டர் ஆப் டிசைன் - எம்.டெஸ்.,

படிப்பு காலம்: 2 ஆண்டுகள்


பிரிவுகள்:

கம்யூனிகேஷன் டிசைன் - பிலிம் அண்ட் வீடியோ கம்யூனிகேஷன், கிராபிக் டிசைன், அனிமேஷன் பிலிம் டிசைன், போட்டோகிராபி டிசைன்.


இண்ட்ஸ்டிரியல் டிசைன் - செராமிக் மற்றும் கிளாஸ் டிசைன், பர்னிச்சர் மற்றும் இண்டீரியர் டிசைன், புராடக்ட் டிசைன், டாய் மற்றும் கேம் டிசைன், டிரான்ஸ்போர்ட்டேஷன் மற்றும் ஆட்டோமொபைல் டிசைன், யுனிவர்சல் டிசைன்.


இண்டர்டிசிப்பிளினரி டிசைன்- டிசைன் பார் ரீடெயில் எக்ஸ்பீரியன்ஸ், ஸ்டேரடெஜிக் டிசைன் மேனேஜ்மெண்ட்.


ஐ.டி., இண்டெக்ரேட்டர்டு - டிஜிட்டல் கேம் டிசைன், இண்டரேக்சன் டிசைன், இன்பர்மேஷன் டிசைன், நியூமீடியா டிசைன்.


டெக்ஸ்டைல், அப்பேரல், லைப்ஸ்டைல் அண்ட் ஆக்சசரி டிசைன் - அப்பேரல் டிசைன், லைப்ஸ்டைல் அண்ட் ஆக்சசரி டிசைன். டெக்ஸ்டை டிசைன்.


ஆராய்ச்சி படிப்பு: பிஎச்.டி., 


பிரிவுகள்: டிசைன் எஜுகேஷன், டிசைன் இன்னோவேஷன், சோசியல் இன்னோவேஷன், டிசைன் பிராக்டீஸ் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 


சேர்க்கை முறை: 

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில், 2022-23ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது. மாணவர்களின் துறை சார்ந்த அறிவு, திறன்களை அறிவும் வகையில் இரண்டு கட்டங்களில் டி.ஏ.டி., எனும் 'டிசைன் ஆப்டிடியூட் டெஸ்ட்’ நடத்தப்படும். admissions.nid.edu எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30, 2021.


விபரங்களுக்கு: www.nid.edu


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us