அறிவோம் டி.என்.ஏ.யு., | Kalvimalar - News

அறிவோம் டி.என்.ஏ.யு.,செப்டம்பர் 29,2021,20:51 IST

எழுத்தின் அளவு :

சென்னை சைதாப்பேட்டையில் 1876ம் ஆண்டு வேளாண் பள்ளியாக துவங்கப்பட்டு, 1906ம் ஆண்டு கோவையில் வேளாண் கல்லூரியாக மாற்றப்பட்டு, பல்வேறு தொடர் வளர்ச்சிக்கு பிறகு 1971ம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.10 இளநிலை பட்டப்படிப்புகள், 35 முதுநிலை பட்டப்படிப்புகள், 30 ஆராய்ச்சி படிப்புகள், 15 உறுப்பு கல்லூரிகள், 38 ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றுடன் தனித்து நிற்கும் இப்பல்கலையில் 28 தனியார் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இளநிலைப் படிப்புகள்


பி.எஸ்சி.,-(ஹானர்ஸ்) அக்ரிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) ஹார்ட்டிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) புட், நியூட்டிரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) பாரஸ்ட்ரி, பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) செரிகல்ச்சர்-30 இடங்கள், பி.டெக்., -அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், பி.டெக்.,-பயோடெக்னாலஜி, பி.எஸ்சி.,-அக்ரிபிசினஸ் மேனேஜ்மெண்ட், பி.டெக்.,-புட் டெக்னாலஜி, பி.டெக்.,-எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங். அக்ரிகல்ச்சர் மற்றும்  ஹார்ட்டிகல்ச்சர் படிப்புகள் தமிழ் வழியிலும் பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன.கல்வித்தகுதி:


12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். பொதுவாக, இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும் என்றாலும், சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் சில படிப்புகளில், தொழில்பிரிவு மாணவர்களும் சேரலாம். முதுநிலை படிப்புகள்:


அக்ரிகல்ச்சுரல் எக்னாமிக்ஸ், எண்டமோலஜி, மைக்ரோபயாலஜி, அக்ரோனமி, பிளானட் பிசியாலஜி, சாயில் சயின்ஸ் அண்ட் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட்ரி, ரிமோட் சென்சிங் அண்ட் ஜியாகிரபிக் இன்பர்மேஷன் சிஸ்டம், என்விரான்மெண்டல் சயின்ஸ், அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட், நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, வெஜிடபிள் சயின்ஸ், புரூட் சயின்ஸ் உட்பட 35 பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்புளும், 30 பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன. கல்வித்தகுதி: சேர்க்கை பெறும் படிப்பிற்கு ஏற்ப, துறை சார்ந்த பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேவையான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எனினும், நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.மாணவர் சேர்க்கை முறை:


மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பிக்கும்  முறை:


பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு: www.tnau.ac.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us