ஜாயிண்ட் அட்மிஷன் டெஸ்ட் | Kalvimalar - News

ஜாயிண்ட் அட்மிஷன் டெஸ்ட்செப்டம்பர் 17,2021,01:07 IST

எழுத்தின் அளவு :

நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக எழுத வேண்டிய தேர்வுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று, 'ஜாயிண்ட் அட்மிஷன் டெஸ்ட்’ - ஜே.ஏ.எம்.,அடுத்த கல்வி ஆண்டில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
படிப்புகள்:


* எம்.எஸ்சி., 


* ஜாயிண்ட் எம்.எஸ்சி., -பிஎச்.டி., 


* டியூல் டிகிரி 


* இன்டெக்ரேட்டடு பிஎச்.டி., 


* இதர முதுநிலை படிப்புகள்
கல்வி நிறுவனங்கள்:


பிலாய், புபனேஸ்வர், பாம்பே, டில்லி, தான்பாத், காந்திநகர், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜோத்பூர், கான்பூர், காரக்பூர், சென்னை, மண்டி, பாலக்காடு, பாட்னா, ரூர்க்கி, ரோபர், திருப்பதி மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்வி நிறுவனங்கள். மேலும், சி.எப்.டி.ஐ., ஐ.ஐ.இ.எஸ்.டி., எஸ்.எல்.ஐ.இ.டி., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.கல்வித் தகுதி: மாணவர்கள் தேர்வு செய்யும் கல்வி நிறுவனம் மற்றும் படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.தேர்வு தாள்கள் மற்றும் முறைகள்:


பயோடெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, எக்னாமிக்ஸ், ஜியாலஜி, மேத்மெடிக்ஸ், மேத்மெடிக்கல் ஸ்டேடிஸ்டிக்ஸ் மற்றும் பிசிக்ஸ் ஆகிய பிரதான தாள்கள் இத்தேர்வு இடம்பெறுகின்றன. இந்த தாள்களில், மல்டிபில் சாய்ஸ், மல்டிபில் செலக்ட் மற்றும் நியூமெரிக்கல் டைப் ஆகிய மூன்று வடிவங்களில் கேள்விகள் இடம்பெறும். எனினும், அனைத்து கேள்விகளும் 'அப்ஜெக்டிவ்’ முறையில் மட்டுமே கேட்கப்படும். மாணவர்கள் ஏதேனும் ஒரு தாள் அல்லது இரண்டு தாள்கள் மட்டுமே எழுத விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பிக்கும் முறை: 


https://joaps.iitr.ac.in/எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வும் கம்யூட்டர் வாயிலாக, ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 11தேர்வு நாள்: பிப்ரவரி 13, 2022விபரங்களுக்கு: https://jam.iitr.ac.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us