கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் | Kalvimalar - News

கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்செப்டம்பர் 04,2021,22:41 IST

எழுத்தின் அளவு :

நாட்டின் முன்னணி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காக தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வு, ‘கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்’!மத்திய மனிதவள துறை அமைச்சகம் சார்பாக, 7 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) கல்வி நிறுவனங்கள் இணைந்து இத்தேர்வை நடத்துகின்றன. உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மட்டுமின்றி, அரசின் பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் இத்தேர்வை எழுவது அவசியம்.பாடப்பிரிவுகள்


ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி, சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், என்விரான்மெண்டல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ஈகோலஜி அண்ட் எவலூசன், ஜியாலஜி அண்ட் ஜியோபிசிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங், மேத்மெடிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிசிக்ஸ், புரொடக்சன் அண்ட் இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங், ஸ்டேடிஸ்டிக்ஸ், டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் அண்ட் பைபர் சயின்ஸ், இன்ஜினியரிங் சயின்சஸ், ஹுமானிட்டிஸ் அண்ட் சோசியல் சயின்சஸ், லைப் சயின்சஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு எழுதலாம். இவற்றுடன் ஜியோமெடிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் நேவல் ஆர்க்கிடெக்சர் அண்ட் மரைன் இன்ஜினியரிங் ஆகிய இரண்டு பாடப்பிரிவுகள் புதியதாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.தகுதிகள்


பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, அறிவியல், கலை உட்பட தேர்வு எழுதும் பாடப்பிரிவுக்கு ஏற்ற துறையில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை


மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். தேர்விற்கான அதிகாரப்பூர்வ இணைதளம் வயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். 2022ம் ஆண்டு தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை


மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு, 65 கேள்விகள், மூன்று பிரிவுகளாக கேட்கப்படும். அதாவது, ஜெனரல் ஆப்டிடியூட், இன்ஜினியரிங் மேத்மெட்டிக்ஸ் மற்றும் மாணவரது துறை சார்ந்த பிரிவில் கேள்விகள் இருக்கும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செல்லும். கணினி வழி தேர்வாக மட்டுமே இத்தேர்வு நடைபெறும். ‘மல்ட்டிப்பிள் சாயிஸ்’ கேள்விகள் மற்றும் ‘நியூமரிக்கல் டைப்’ கேள்விகள் கேட்கப்படும். ‘மல்ட்டிப்பில் சாயிஸ்’ கேள்விகளில் மட்டும் தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 24 விபரங்களுக்கு: https://gate.iitkgp.ac.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us